முதல்வர் வெளியிட்ட எம் ஜி ஆர் பாடல் | 18ஆம் வருடத்தில் ஒக்கடு ; மகேஷ்பாபு மனைவி மீது தயாரிப்பாளர் வருத்தம் | விரைவில் சுரேஷ்கோபியின் ஒத்தக்கொம்பன் ஆரம்பம் | சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் |
பல இயக்குனர் இயக்கிய படங்களை ஒரே படமாக தொகுத்து வெளிவரும் படங்கள் அந்தாலஜி வகை படங்கள் என குறிப்பிடப்படுகிறது. இந்த வகையான படங்கள் மலையாளத்தில் அடிக்கடி வெளிவரும். தற்போது கொரோனா பரவலுக்கு பிறகு தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஓடிடி தளத்தில் வெளியிடும் வகையிலான அந்தாலஜி படங்கள் அதிக அளவில் தயாராகிறது.
ராஜீவ் மேனன், கெளதம் மேனன், சுஹாசினி மணிரத்னம், சுதா கொங்கரா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான புத்தம் புதுக் காலை சமீபத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.
நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்துக்காக 2 ஆந்தாலஜி படங்கள் தயாராகி வருகின்றன. வேல்ஸ் நிறுவனம் குட்டி லவ் ஸ்டோரி என்ற ஆந்தாலஜியை தயாரித்துள்ளது. இந்நிலையில், வெங்கட்பிரபுவின் ப்ளாக் டிக்கெட் கம்பெனி புதிய ஆந்தாலஜி படம் ஒன்றை தயாரித்துள்ளது. இதனை வெங்கட் பிரபு, பா.ரஞ்சித், ராஜேஷ் மற்றும் சிம்பு தேவன் ஆகியோர் இயக்கியுள்ளனர்.
விக்டிம் என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த அந்தாலஜியில் இடம் பெறும் 4 கதைகளுமே ஒரே கருவைக் கொண்டு இருக்கும் எனக் கூறப்படுகிறது. இவைகள் தவிர மேலும் சில அந்தாலஜி வகை படங்கள் தயாரிப்பில் உள்ளது.