Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

நடிகர் சங்கத்தில் இருந்து அரசியல்வாதியின் மகன் விலக்கப்படுவாரா ?

01 நவ, 2020 - 18:07 IST
எழுத்தின் அளவு:
நடிகர்-சங்கத்தில்-இருந்து-தலைமைச்-செயலரின்-மகன்-விலக்கப்படுவாரா-?

மலையாள திரையுலகில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் பினிஷ் கொடியேறி. இவர் கேரள மார்.கம்யூ., கட்சியின் செயலாளரான கொடியேறி பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் ஆவார்.. சமீபத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக பெங்களூரு அமலாக்கத்துறை அதிகாரிகளால் பினிஷ் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இவர் நடிகராக இருப்பதால், நடிகர் சங்கத்திலிருந்து இவர் விலக்கப்படுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக நடிகர் திலீப், சில வருடங்களுக்கு முன், நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்ட சமயத்தில் அவர் நடிகர் சங்கத்திலிருந்து விலக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அதேபோன்று நடவடிக்கை தற்போது இவர் மீது எடுக்கப்படுமா என திலீப் ஆதரவு திரையுலக பிரபலங்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதேசமயம் இவர் அரசியல் செல்வாக்குள்ள நடிகர் என்பதால் இவர் மீது நடிகர் சங்கத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி நடிகர் சங்கத்தில் துணை பொதுச்செயலாளரான இடைவேளை பாபு என்பவர் கூறும்போது, “விரைவில் இதுபற்றி தலைவர் மோகன்லால் தலையைமையில் கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அதில் விவாதிக்கப்படும்.. அதன்பின்னரே இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்..

அதேசமயம் நடிகர் திலீப் பிரச்சனை, நடிகர் சங்கத்தில் இருந்த இன்னொரு நடிகையுடன் சம்பந்தப்பட்டது என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், ஆனால் தற்போது பினிஷ் கொடியேறி கைது செய்யப்பட்டுள்ளது அவரது சொந்த பிரச்சனை தொடர்பாக என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியமில்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸ் - தமிழை மிஞ்சும் தெலுங்குபிக்பாஸ் - தமிழை மிஞ்சும் தெலுங்கு விளம்பரத்தில் நடித்த நடிகைக்கு ஆங்கில படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குனர் விளம்பரத்தில் நடித்த நடிகைக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

LAX - Trichy,இந்தியா
02 நவ, 2020 - 10:38 Report Abuse
LAX அடடே.. 'நீக்க முடியாது' னு சொல்றதுக்கு.. என்ன அருமையான காரணம்.. தேடித் தேடி கண்டுபிடிச்சிருப்பாங்க போல..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in