டி.ராஜேந்தர் பூரண குணமடைந்தார் : அமெரிக்காவில் ஒரு மாதம் ஓய்வு | சமந்தாவின் இன்ஸ்டா முடக்கப்பட்டதா? | வெந்து தணிந்தது காடு - இசை விழா ஆகஸ்ட்டில் நடைபெறுகிறது | பொன்னியின் செல்வன் - நந்தினியாக ஐஸ்வர்யா ராய் | 'தி கிரேமேன்' - பட புரொமோஷனுக்காக ஹாலிவுட் பறந்த தனுஷ் | விஜய்யின் வாரிசு - பிரெஞ்சு படத்தின் தழுவலா? | பார்த்திபனை ஆச்சரியப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | உலக அளவில் சாதனை படைத்த 'கேஜிஎப்' போஜ்புரி | ஜவான் - ஷாருக்கானுக்கும் வில்லன் விஜய் சேதுபதி? | ஷங்கரின் படத்தில் நடனத்திற்கு 1000 பேர், சண்டைக்கு 1200 பேர் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். அவருக்கு நேற்று முன்தினம் அக்டோபர் 30ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற்றது. கொரோனா காலம் என்பதால் நெருங்கிய உறவினர்கள், மிக நெருக்கமான நண்பர்கள் என குறைந்த அளவில் மட்டுமே அவரது திருமணத்தில் கலந்து கொண்டனர்.
தெலுங்கு, தமிழ்த் திரையுலகத்திலிருந்து யாரும் செல்லவில்லை என்றே தெரிகிறது. இருந்தாலும் பல சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
காஜலுக்கு நடிகை அனுஷ்கா அருமையான வாழ்த்து ஒன்றைத் தெரிவித்திருக்கிறார். “இந்த பூமியில் மிகப் பெரும் சந்தோஷம் திருமணம்தான். இரண்டு மனங்கள், ஆனால் ஒரே எண்ணத்துடன், இரண்டு இதயங்கள் ஒரே துடிப்புடன்... அன்பான காஜல், கௌதம் ஆகியோருக்கு ஆனந்தமான திருமண வாழ்த்துகள்,” என்று வாழ்த்தியுள்ளார் அனுஷ்கா.
காஜல் திருமணம் பற்றியும் அடிக்கடி வதந்திகள் வந்து அது கடைசியில் உண்மையானது. அனுஷ்கா பற்றியும் அடிக்கடி வதந்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அவை எப்போது உண்மையாகும் என்பது விரைவில் தெரிய வரும்.