Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ் - வேல்முருகன் வெளியேற்றம்?

01 நவ, 2020 - 12:58 IST
எழுத்தின் அளவு:
Velmurugan-evict-in-Biggboss-show?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 4வது வாரத்தை இன்றுடன் நிறைவு செய்கிறது. முதல் வாரத்தின் இறுதியில் நிகழ்ச்சியிலிருந்து யாரும் வெளியேற்றப்படுவது வழக்கமில்லை. இரண்டாவது வார முடிவில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய முதல் போட்டியாளராக நடிகை ரேகா இருந்தார்.

மூன்றாவது வார இறுதியான கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஜித், வெளியேற தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவரிடம் எவிக்ஷனிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும் 'பாஸ்' இருந்ததால் அவர் அதைப் பயன்படுத்தி தன்னை தக்க வைத்துக் கொண்டார். அதனால், கடந்த வாரம் யாரும் வெளியேறவில்லை.

இன்றுடன் முடியும் நான்காவது வாரத்தில் வெளியேறுவதற்காக 11 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டார்கள். அவர்களில், சனம், அனிதா, ரம்யா பாண்டியன், ஜித்தன் ரமேஷ், பாலா, ரியோ ஆகியோர் நேற்றே காப்பாற்றப்பட்டார்கள். எஞ்சியுள்ள 5 பேரில் ஆஜித், சோம், சுரேஷ் சக்ரவர்த்தி, நிஷா, வேல் முருகன் ஆகியோரில் ஒருவர் இன்று வெளியேற்றப்பட வேண்டும்.

ரசிகர்கள் அளித்த வாக்குகளின்படி இன்று வேல் முருகன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. விக்கிபீடியாவில் கூட அதற்குள்ளாகவே வேல் முருகன் வெளியேற்றப்பட்டார் என்று பதிவு செய்துவிட்டார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
முதல் ஜேம்ஸ்பாண்ட் நாயகன் ஷான் கானரி காலமானார்முதல் ஜேம்ஸ்பாண்ட் நாயகன் ஷான் ... நவம்பர் 10 - திறப்புக்குத் தயாராகும் தியேட்டர்கள் நவம்பர் 10 - திறப்புக்குத் தயாராகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in