மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் கமல்ஹாசனுடன் 'இந்தியன் 2' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் 'ஆச்சார்யா' படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
காஜல் அகர்வாலுக்கு நேற்று(அக்., 30) மும்பையில் திருமணம் நடைபெற்றது. கௌதம் கிச்லு என்பவரை காஜல் திருமணம் செய்து கொண்டார். கொரோனா பயம் காரணமாக மிக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என குறைவானவர்களுக்கு மட்டுமே அழைக்கப்பட்டார்கள்.
திருமணம் முடிந்த உடனேயே புதுமணத் தம்பதியர் ஹனிமூன் போவது வழக்கம். ஆனால், காஜல் அகர்வால் தெலுங்கில் 'ஆச்சார்யா' படத்தில் நடிக்க வேண்டி உள்ளதால் தன் ஹனிமூனை தள்ளி வைத்துவிட்டாராம். ஷுட்டிங்கிற்கு காஜல் முக்கியத்துவம் கொடுத்து ஹனிமூனை தள்ளி வைத்துவிட்டது குறித்து 'ஆச்சார்யா' படக்குழுவினர் ஆச்சரியப்பட்டுவிட்டார்களாம்.
கடமை கண் போன்றது என காஜல் நினைத்திருப்பால் போலும்.