'விக்ரம் 3'க்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குநர்: கமல் | பியூட்டி கம்மிங் ஒத்து : ரம்யா கவுடாக்கு ஆர்மி ரெடி | தேவதை போல் ஜொலிக்கும் ஸ்ருதிராஜ் | விக்னேஷ் சிவனுக்கு அஜித் போட்ட உத்தரவு | ‛வீரன்'-ஆக களமிறங்கிய ஆதி | தனுஷ் பிறந்தநாளில் திரைக்கு வரும் திருச்சிற்றம்பலம் | 12 நாட்களில் 100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் டான் | விஜய்யின் 68வது படத்தை இயக்கும் அட்லி | கஞ்சா பூ கண்ணாலே பாடல் லிரிக் வீடியோ வெளியீடு | ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடிக்கும் ‛1947 ஆகஸ்ட் 16' |
அமீர்கானின் தங்கல் படம் மூலம் பிரபலமானவர் பாத்திமா சனா ஷேக். குழந்தையாக இருந்த போதிருந்தே நடித்து வரும் இவர், சாக்சி 420 படத்தில் கமலின் மகளாக நடித்தவர். தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அவ்வை சண்முகி படத்தில் இந்தி ரீமேக் தான் சாக்சி 420.
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவராக உள்ள இவர், படவாய்ப்புகளுக்காக படுக்கைக்கு வரச் சொல்லி திரையுலகைச் சேர்ந்தவர்கள் தன்னைக் கட்டாயப்படுத்தியதாக பேட்டி ஒன்றில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் அப்பேட்டியில் அவர், “மூன்று வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன். பாதிக்கப்பட்டவர்கள் எப்பொழுதுமே அது குறித்து பேசுவது இல்லை. ஆனால் தற்போது இந்த உலகம் மாறும் என்று நம்புகிறேன். பாலியல் தொல்லைகள் குறித்து தற்போது அதிகம் விழிப்புணர்வு உள்ளது. ஆனால் முன்பெல்லாம் ஏதாவது நடந்தால் வெளியே சொல்லாதே என்பார்கள்.
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு வரச் சொல்லிய பிரச்சனையை நானும் சந்தித்திருக்கிறேன். செக்ஸ் வைத்துக் கொண்டால் மட்டுமே பட வாய்ப்பு தருவோம் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். படுக்கைக்கு செல்ல மறுத்ததால் பல முறை பட வாய்ப்பை இழந்திருக்கிறேன். மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிய பிறகு சிலர் பரிந்துரை செய்ததால் எனக்கு பதில் வேறு ஒரு நடிகையை நடிக்க வைத்ததும் நடந்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ரவீணா டாண்டன் உட்பட பல பிரபல பாலிவுட் நடிகைகள் திரைத்துறையில் உள்ள பாலியல் அத்துமீறல்கள் குறித்து பேசியுள்ள நிலையில், பாத்திமாவின் இந்தப் பேட்டியும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.