துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
முன்னணி நடிகராக வளர்ந்துவிட்ட தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ஒருபக்கம் பிசியாக படங்களில் நடித்துக் கொண்டு இருந்தாலும். இன்னொரு பக்கம் படத்தயாரிப்பு, கார்மெண்ட் வியாபாரம், அறக்கட்டளை சேவை என பல்வேறு துறைகளில் தனது வியாபாரத்தையும், சேவையையும் விரிவுபடுத்தி வருகிறார். இந்த நிலையில் புதிதாக இ--பைக் விற்பனை நிறுவனம் ஒன்றை துவங்க இருக்கிறார் விஜய் தேவரகொண்டா. இதற்கான அறிமுக விழா நேற்று நடைபெற்றது.
ஆரம்பத்தில் ஐதராபாத் மற்றும் செகந்திராபாத்தில் இதன் கிளைகளை துவங்க இருக்கிறார் விஜய் தேவரகொண்டா. சமீபத்தில் தெலங்கானா அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக, மின்சார வாகனங்கள் குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டது. இதை தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறாராம் விஜய்தேவரகொண்டா.