ஜுன் 2ல் இரண்டு படங்களுக்கே முக்கிய போட்டி | மாவீரன் படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது | யாஷிகா ஆனந்த் - அஜித் மைத்துனர் ரிச்சர்ட் ரிஷி காதலா...? | 37 ஆண்டுகளை நிறைவு செய்த 'விக்ரம்' | பாபா படத்தை தொடர்ந்து மற்றொரு ரஜினி படம் ரீ ரிலீஸ் | கதாநாயகன் ஆகும் பிக்பாஸ் பிரபலம் | மும்பையில் தனுஷ்... மீண்டும் ஒரு பாலிவுட் படம் | த்ரிஷா படத்தில் கெஸ்ட் ரோலில் மூன்று பிரபல ஹீரோக்கள் | நாயகன் படம் போன்று இருக்கும் : கமல் | 150 வயது வரை வாழும் வித்தை எனக்கு தெரியும் : சரத்குமார் |
கேரளாவை சேர்ந்த மிருதுளா முரளி, 'ரெட்சில்லீஸ்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் கண்களும் கவிபாடுதே படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு நாகராஜ சோழன் எம்.ஏ, எம்எல்ஏ., உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தற்போது மிருதுளா முரளிக்கு திருமணம் நடந்துள்ளது. தான் நடித்த மலையாள படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய நிதின் விஜய் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஏப்ரல் மாதம் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
கொரோனா பிரச்சினையால் தள்ளி வைக்கப்பட்ட திருமணம் நேற்று முன்தினம் நடந்தது. நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். நடிகைகள் பாவனா, ரம்யா நம்பீசன், சரண்யா மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.