மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அதனால் இப்போதைக்கு அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்றும் ரஜினி பெயரில் ஒரு போலி அறிக்கை வெளியானது. இந்த அறிக்கை போலியானது தான். ஆனால் அதில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்கள் உண்மையானவை. என்று ரஜினி தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இதனால் ரஜினி இப்போதைக்கு அரசியலுக்கு வரப்போவதில்லை என்கிற தோற்றம் உருவாகி உள்ளது.
வருகிற சட்டசபை தேர்தலின்போது ரஜினி அரசியலுக்கு வந்து விடுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ரஜினியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அவர் வீட்டு முன் நேற்று ரசிகர்கள் திரண்டனர்.
“இப்போ இல்லைனா எப்போதுமே இல்ல” என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட்டுகளை அணிந்து ரஜினி ரசிகர்கள் போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் குவிந்தனர். போலீசார் வந்து அவர்களை அப்புறப்படுத்தினார்கள்.