மேக்னா நடிக்கும் நான் வேற மாதிரி | லிப்ட்-ல் பாடிய சிவகார்த்திகேயன் | ஹாஸ்டல் ஆக மாறிய மலையாள ரீமேக்கில் அசோக் செல்வன் | தொப்பை வளர்த்து, கரைத்த உன்னி முகுந்தன். | தனிமைப்படுத்திக் கொண்ட மகேஷ்பாபு - ராம்சரண் | கொரோனா தீவிரத்திலும் விடாமல் படம் இயக்கிவரும் மோகன்லால் | லாபம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் வாழ்க்கையில் முக்கியமான தருணம் : சூரி நெகிழ்ச்சி | மீண்டும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட இலியானா | தெலுங்கு கற்கும் விஜய் சேதுபதி |
தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட அவர் நடித்த இரண்டு படங்கள் ஓடிடியில் ரிலீஸாகிவிட்டது. இந்தநிலையில் தெலுங்கில் ரவிதேஜா நடிக்கும் 'க்ராக்' என்கிற படத்தில் கதாநாயகியாக 'ஜெயம்மா' என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வரலட்சுமி. ஸ்ருதிஹாசன் இன்னொரு கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், இந்தப்படத்திற்கான டப்பிங் பேசும் பணியை துவங்கியுள்ளார் வரலட்சுமி. ஏற்கனவே தெலுங்கில் வெளியான ராமகிருஷ்ணா பிஏ பிஎல், மற்றும் வெளியாக இருக்கும் நாந்தி ஆகிய படங்களில் நடித்த வரலட்சுமி, அந்த அனுபவத்தில் தெலுங்கில் சரளமாக பேச கற்றுக்கொண்டதால் தனது சொந்தக்குரலிலேயே டப்பிங்கும் பேசி வருகிறார்.