Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பிக் பாஸையே அலற விட்ட சுசித்ரா

29 அக், 2020 - 14:36 IST
எழுத்தின் அளவு:
suchitra-to-entre-to-biggboss-house

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நான்காவது வாரமாக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. முதல் நாள் போட்டியாளராக களமிறங்கிய நடிகை ரேகா, இரண்டாவது வாரத்தில் வெளியேறி விட்டார். வைல்ட் கார்ட் எண்ட்ரியாக விஜே அர்ச்சனா உள்ளே சென்றார். இதனால் தற்போது வீட்டில் 16 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் இந்த வாரம் ஒருவர் வெளியேறி விடுவார்.


இந்த சூழ்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு இரண்டாவது வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பிரபல பாடகி சுசித்ரா செல்ல இருக்கிறார். இதற்காக அவர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில் தன் அறையில் இருந்து சுசித்ரா நேற்று முன்தினம் நள்ளிரவு, யாரோ தன்னைக் கொல்ல வருவதாகக் கூறி திடீரென அலறிக் கொண்டு வெளியில் ஓடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பின்னர் ஹோட்டல் நிர்வாகத்தினர் அளித்த தகவலின் படி விரைந்து வந்த பிக் பாஸ் தயாரிப்புக் குழு, சுசித்ராவை சமாதானம் செய்ததாகத் தெரிகிறது. நள்ளிரவுக்குப் பின்னரே சுசித்ரா மீண்டும் தனது அறைக்கு சென்றதாக கூறப்படுகிறது.


ஏற்கனவே சுசிலீக்ஸ் என்ற பெயரில் திரைப்பிரபலங்கள் பலரின் அந்தரங்க வாழ்க்கை பற்றிப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் சுசித்ரா. இது தவிர தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிடும் கருத்துக்களாலும் சர்ச்சைகளில் சிக்கினார். எனவே இவரது வருகையால் பிக் பாஸ் வீட்டில் நிச்சயம் பல பரபரப்பான சம்பவங்களை எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.


ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்னரே இப்படி பரபரப்பைக் கூட்டி விட்டார் சுசித்ரா. இன்னும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறாரோ.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கலக்க போவது யாரு சரத் திருமணம்கலக்க போவது யாரு சரத் திருமணம் சீனையே மாற்றிய அர்ச்சனா சீனையே மாற்றிய அர்ச்சனா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in