Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் பாஜகவிற்கு வரும் விஜயசாந்தி ?

29 அக், 2020 - 14:28 IST
எழுத்தின் அளவு:
did-vijayashanthi-again-return-to-bjp

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நாயகியாக இருந்தவர் குஷ்பு. 2010ம் ஆண்டு திமுக-வில் இணைந்து தீவிர அரசியலில் இறங்கினார். பின்னர் 2014ம் ஆண்டு திமுகவை விட்டு விலகி காங்கிரசில் இணைந்தார். அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராகவும் பதவி வகித்தார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.


குஷ்பு வழியில் தற்போது தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகையான விஜயசாந்தியும் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணையப் போவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி சமீபத்தில் விஜயசாந்தியைச் சந்தித்து சில மணி நேரங்கள் பேசியிருக்கிறார். அதன்பிறகுதான் விஜயசாந்தி பாஜகவில் இணையப் போகிறார் என்ற தகவல் பரவி வருகிறது.


விஜயசாந்தி தெலுங்கில் எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார். 80, 90களில் முன்னணி நடிகையாக ஆக்ஷன் ஹீரோயினாகப் பெயர் பெற்றவர். ஆந்திராவைப் பிரித்து தெலங்கானா மாநிலத்தை உருவாக்க வேண்டும் எனறு போராட்டக் களத்தில் குதித்தவர்.


விஜயசாந்தி 1998ல் பாஜகவில் சேர்ந்ததன் மூலம்தான் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அதன் பெண்கள் பிரிவிலும் செயலாளராகப் பதவி வகித்தார். அதன்பின் அக்கட்சியிலிருந்து விலகி தல்லி தெலங்கானா என்ற கட்சியை 2009ல் ஆரம்பித்தார். பின் அவருடைய கட்சியை தெலங்கானா ராஷ்டிரிய சமிதியுடன் இணைத்தார். 2014ம் ஆண்டு அக்கட்சியை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்தார். இப்போது மீண்டும் பாஜகவிற்கே திரும்புவாரா என்பது விரைவில் தெரிய வரும்.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எனது உடல்நிலை குறித்த தகவல்கள் உண்மையே : ரஜினிஎனது உடல்நிலை குறித்த தகவல்கள் ... 'சூரரைப் போற்று' டிரைலர் - சூர்யா படங்களில் சாதனை 'சூரரைப் போற்று' டிரைலர் - சூர்யா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in