Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நவரசா - 9 குறும்படங்களுடன் ஓடிடிக்கு வரும் மணிரத்னம்

28 அக், 2020 - 16:26 IST
எழுத்தின் அளவு:
Maniratnams-Navarasa-with-9-directors-short-film

கொரோனா ஊரடங்கு, பொழுதுபோக்கு உலகில் சில முக்கிய மாற்றங்களை நிகழ்த்திவிட்டது. அதற்கு முன்பு வரையிலும் ஓடிடி தளங்கள் மீது சினிமா ரசிகர்களின் பார்வை அதிகம் விழவில்லை.

ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், மே மாதத்தில் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களைத் திரையிடும் முறை ஆரம்பமானது. அதன்பின் சில திரைப்படங்கள் வெளியாகின.

சில ஓடிடி தளங்கள் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களை அவர்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளைச் செய்ய ஆரம்பித்தன. முழுமையான திரைப்படங்களை அவர்கள் இன்னும் கொடுக்கவில்லை என்றாலும், உடனடியாக சில குறும்படங்களைத் தயாரித்தும், இயக்கியும் கொடுத்துவிட்டார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அமேசான் ஓடிடி தளத்தில் ஐந்து பிரபல இயக்குனர்கள் இயக்கிய ஐந்து குறும்படங்களின் தொகுப்பான 'புத்தம் புதுக் காலை' வெளியானது. ஆனால், அதற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

அடுத்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் மணிரத்னம், ஜெயேந்திரா தயாரித்துள்ள 9 குறும்படங்களை 'நவரசா' என்ற தலைப்பில் வெளியிட உள்ளது. இந்த 9 குறும்படங்களை அரவிந்த்சாமி, பிஜாய் நம்பியார், கவுதம் மேனன், கார்த்திக் சுப்பராஜ், கார்த்திக் நரேன், கே.வி.ஆனந்த், பொன்ராம், ரதீந்திரன் பிரசாத், ஹலிதா ஷமீம் ஆகியோர் இயக்கியுள்ளார்கள்.

40 நடிகர்கள், நடிகைகள் நடித்துள்ள இந்த குறும்படங்கள் “கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு” ஆகிய உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குறும்படங்களை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொரோனா சமயத்தில் பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு வழங்க 'நவரசா' தயாரிப்பாளர்கள் மணிரத்னம், ஜெயேந்திரா முடிவு செய்துள்ளார்கள். நெட்பிளிக்ஸ் தளத்தில் 'நவரசா' எப்போது வெளியாகும் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'அட்மின்' வைத்து போட்டோக்களைப் பதிவிடும் ஷிவானி'அட்மின்' வைத்து போட்டோக்களைப் ... முப்தி ரீமேக் - இயக்குனர் மாற்றம்? முப்தி ரீமேக் - இயக்குனர் மாற்றம்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in