மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
ஆட்டோகிராப் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை கனிகா. கடந்த வருடம் வெளியான மாமாங்கம் என்கிற வரலாற்று படத்தில் நடித்த கனிகா, தற்போது கைவசம் இரண்டு படங்களை வைத்துள்ளார். இந்தநிலையில் எப்போதுமே உடற்பயிற்சிக்கும் தனது தோற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வரும் கனிகா, அவ்வப்போது தனது இளமை தோற்றத்துடன் கூடிய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதேபோன்று தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள கனிகா, “வயது என்பது ஒரு நம்பர் என்று அனைவரும் சொல்வார்கள்.. ஆனால் என்னை பொறுத்தவரை, வயது என்பது ஒரு மைண்ட்செட்.. அவ்வளவுதான்.. நான் எனது டீனேஜ் வயதில் இருந்ததை விட, 30 வயதிற்கு மேல் தான் உண்மையான சந்தோசத்தை அனுபவித்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்