Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எதற்காகத் திருமணம் - 'கபாலி' நாயகி ராதிகா ஆப்தே தந்த அதிர்ச்சி

27 அக், 2020 - 19:35 IST
எழுத்தின் அளவு:
Radhika-apte-replied-why-she-married?

தமிழில் முன்னரே சில படங்களில் நடித்திருந்தாலும் 'கபாலி' படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த பிறகுதான் ராதிகா ஆப்தே யார் என்பது தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் தெரிய வந்தது.

ஹிந்தியில் சர்ச்சைக்குரிய சில கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்தவரான ராதிகா ஆப்தே திருமணம் செய்து கொண்ட சில வருடங்களுக்குப் பின்னரும் அது பற்றி யாருக்கும் தெரியாமல் இருந்தது. மிகவும் தாமதமாகத்தான் அவர் திருமணம் பற்றிய தகவல் வெளியில் வந்தது. பிரிட்டிஸ் இசைக்கலைஞரான பெனடிக்ட் டெய்லர் என்பவரை 2012ம் ஆண்டு ராதிகா திருமணம் செய்து கொண்டார்.

எதற்காகத் திருமணம் செய்து கொண்டேன் என்பது குறித்து ராதிகா தற்போது வெளிப்படையாக பதிலளித்துள்ளார். “திருமணமானவர்களுக்கு விசா கிடைப்பது எளிது என்பது எனக்குத் தெரிய வந்தது. அதற்கு எந்த எல்லையும் கிடையாது. திருமணத்தின் மீது எனக்கு பெரிய அளவில் நம்பிக்கை இல்லை. நானும் அவரும் ஒன்றாக இருக்க ஆசைப்பட்டோம். அடிக்கடி சந்திப்பதற்கு விசா ஒரு தடையாக இருந்தது. அதனால்தான் திருமணம் செய்து கொண்டேன். அது சரியில்லை என்று தெரியும்,” என்று கூறியிருக்கிறார்.

கொரானோ சூழ்நிலையில் படப்பிடிப்புகள் இல்லாததால், தற்போது லண்டனில் தன்னுடைய கணவருடன் வசித்து வருகிறார் ராதிகா.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் பழைய பொலிவுக்குத் திரும்பும் ராணாமீண்டும் பழைய பொலிவுக்குத் ... சிறுமியை தத்தெடுத்த பிரபலம்! சிறுமியை தத்தெடுத்த பிரபலம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

baala - coimbatore,இந்தியா
28 அக், 2020 - 10:10 Report Abuse
baala அந்த குழந்தை சொல்லுறது சரிதானே. திருமணம் செய்து செய்வதை கல்யாணம் செய்யாமலேயே செய்யுங்கள் என்று சொல்லுகிறது நமது அக்கா குஷ்பு போல
Rate this:
Manian - Chennai,ஈரான்
28 அக், 2020 - 03:53 Report Abuse
Manian இதில் தவறில்லை . சட்டம் ஓட்டைகள் நிறைந்ததே
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
29 அக், 2020 - 08:20Report Abuse
 Muruga Velஅதுக்குன்னு சட்டத்தயா கலியாணம் பண்ணிக்க முடியும் ..இந்த அம்மணியின் அப்பா பிரபல மருத்துவர் ..நடிகையானதுக்கு பதில் மருத்துவ படிப்பு படித்திருக்கலாம் .....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in