Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷ் படத்திற்கு முன்பு கவுதம் கார்த்திக்கை இயக்கும் செல்வராகவன்

27 அக், 2020 - 15:10 IST
எழுத்தின் அளவு:
Selvaraghavan-to-direct-Gautham-karthik

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் செல்வராகவன். கடைசியாக சூர்யா நாயகனாக நடித்த என்.ஜி.கே படத்தை இயக்கி இருந்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

அடுத்ததாக மீண்டும் தனுஷை இயக்க இருக்கிறார் செல்வராகவன் என ஒரு தகவல் வெளியானது. ஆனால் தற்போதைக்கு செல்வராகவன் படத்தில் நடிக்க தனுஷின் கால்ஷீட் இல்லை எனத் தெரிகிறது. கர்ணன், அத்ரங்கி ரே, கார்த்திக் நரேன் படம், ராம்குமார் படம் என தனுஷ் ரொம்பவே பிஸி. இந்தப் படங்களை முடித்த பிறகுதான் செல்வராகவன் படத்தில் அவர் நடிக்க முடியும்.

எனவே அதற்குள் புதிய படமொன்றை இயக்க முடிவெடுத்துள்ளாராம் செல்வராகவன். அப்படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. செல்வராகவன், கவுதம் கார்த்திக்கை நேரில் சந்தித்து கதையைக் கூறியதாகவும், கதை பிடித்து விட்டதால் விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. இப்படம் குறைந்த பட்ஜெட்டில் தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமாருக்கு கொரோனாதயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமாருக்கு ... 'ராதே ஷ்யாம்' படப்பிடிப்புக்கு மீண்டும் சிக்கல் 'ராதே ஷ்யாம்' படப்பிடிப்புக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in