Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனா அச்சத்தை போக்க ரசிகர்களுடன் நடிகர்கள் படம் பார்க்க கோரிக்கை

27 அக், 2020 - 14:15 IST
எழுத்தின் அளவு:
Theatre-owners-request-Actors-to-watch-the-movie-with-fans-in-theatres

தியேட்டர்கள் திறக்கப்படும்போது மக்கள் தியேட்டருக்கு வர அச்சம் கொள்வார்கள், தயங்குவார்கள் அப்போது நடிகர், நடிகைகள் தியேட்டருக்கு வந்தால், அவர்களுடன் அமர்ந்து படம் பார்த்தால் அவர்களே வருகிறார்களே என்று தைரியமாக ரசிகர்களும், பொதுமக்களும் தியேட்டருக்கு வருவார்கள். எனவே நடிகர் நடிகைகள் கண்டிப்பாக தியேட்டருக்கு வந்த படம் பார்க்க வேண்டும் என்று அவர்களை கேட்டுக் கொள்கிறேன், என்கிறார் தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச் செயலாளர் ரோகினி பன்னீர் செல்வம்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது: தியேட்டர்களை திறக்க மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு அனுமதி அளித்துள்ளது. மாநில அரசு விரைவில் அனுமதி அளிக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம். தியேட்டர்கள் திறக்கும்போது மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் கடைபிடிப்போம். ரசிகர்களால் தான் நாங்கள். அவர்களின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்.

ஓடிடி தளங்கள் பற்றி முதலில் எங்களுக்கு பயம் இருந்தது உண்மைதான். ஆனால் இந்த கொரோனா காலத்தில் 15 தமிழ் படங்கள் ஒடிடியில் வெளிவந்துள்ளது. ஆனால் அவைகள் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. மக்கள் தியேட்டரைத் தான் விரும்புகிறார்கள் என்பதை இது காட்டுகிறது. இதனால் எங்கள் பயம் போய்விட்டது. தியேட்டர்கள் தான் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்றார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
தீபாவளிக்கு தியேட்டர்கள் திறப்பு: அமைச்சர் தகவல்தீபாவளிக்கு தியேட்டர்கள் திறப்பு: ... கொரோனா - ஷார்மிக்கு நெகட்டிவ், பெற்றோருக்கு பாசிட்டிவ் கொரோனா - ஷார்மிக்கு நெகட்டிவ், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

suresh kumar - Salmiyah,குவைத்
28 அக், 2020 - 18:03 Report Abuse
suresh kumar எல்லா ஷோவுக்கும் வரணும் அடுத்த படத்தில் நடிக்க போகக்கூடாது. ஆமாம்
Rate this:
MURUGU - SATHYAMANGALAM,இந்தியா
27 அக், 2020 - 20:31 Report Abuse
MURUGU பேருந்து பயணம் என்பதில் ஆரம்பத்தில் அவ்வளவாக கூட்டம் இல்லாமல் தான் இருந்தது. தனியார் பேருந்து ஓடாமல் கூட இருந்தது. ஆனால் நாள் பட நாள் பட அணைத்து பேருந்துகளும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது . அதனால் திரையரங்குகள் திறக்க ஆணை பிறப்பித்தாலும் ஆரம்ப கால கட்டத்தில் கூட்டம் வராமல் இருந்தாலும் , போகப் போக கூட்டம் சேரும். டிக்கெட் வழங்காமலும் , எக்ஸ்ட்ரா நாற்காலி போட்டும் படம் ஓட்டலாம்,
Rate this:
shanan -  ( Posted via: Dinamalar Android App )
27 அக், 2020 - 18:43 Report Abuse
shanan மொத்த யூனிட்டும். வரவேண்டும் தயாரிப்பாளர் உட்பட
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in