Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தியேட்டருக்கே போகாமல் நேரடியாக டிவியிலேயே ரிலீசாகும் சுந்தர்.சி படம்!

26 அக், 2020 - 18:16 IST
எழுத்தின் அளவு:
Sundar-C-movie-releasing-directly-in-TV

ஆக்ஷன் படத்தைத் தொடர்ந்து அரண்மனை 3 படத்தை இயக்கி தயாரித்து வருகிறார் சுந்தர்.சி. இந்தப் பட வேலைகள் ஒருபுறம் இருக்க, கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மாயா பஜார் படத்தின் தமிழ் ரீமேக்கையும் சுந்தர். சி தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தில் பிரசன்னா, ஷாம், அஸ்வின் உள்ளிட்ட 3 ஹீரோக்கள் நடிக்கிறார்கள். ஸ்ருதி நாயகியாக நடிக்கிறார். காமெடி நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பத்ரி இந்தப் பாத்தை இயக்குகிறார். கடந்த மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்திற்கு நாங்க ரொம்ப பிஸி என தலைப்பு வைத்துள்ளனர்.

கொரோனா பிரச்சினையால் ரிலீசுக்கு தயாரான பல படங்கள் ஓடிடியில் ரிலீசாகி வருகின்றன. மாஸ்டர் உள்ளிட்ட சில படங்கள் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் தான் ரிலீஸ் செய்யப்படும் என்பதில் உறுதியாக உள்ளனர். இந்நிலையில் இந்த இரண்டிலும் சேராமல் நாங்க ரொம்ப பிஸி படத்தை வரும் தீபாவளிக்கு நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். இதனை சன் டிவி தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

சுந்தர்.சி அவ்னி மூவிஸ் சார்பாக நான் சிரித்தால், மீசைய முறுக்கு, நட்பே துணை உள்ளிட்ட படங்களைத் தயாரித்திருக்கும் நிலையில் அவர் தயாரிக்கும் 6-வது படமாக நாங்க ரொம்ப பிஸி படம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.இயக்குனர் பத்ரி கூறியதாவது: கொரோனா காலத்தில், குறிப்பிட்ட, 30 நாட்களில் படத்தை முடித்திருப்பது மகிழ்ச்சி. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, 2016-ல் கொண்டுவரப்பட்டது. அந்தக் காலத்தில் கதை நடப்பதால், யார் முகத்திலும் மாஸ்க் இருக்கக் கூடாது; இருக்காது. ஆனால், படப்பிடிப்பை, சமூக இடைவெளியோடு கொரோனா காலத்தில் நடத்தியது சவாலாக இருந்தது. படத்தில் நடித்தவர்கள், அனைவரது திறமைக்கும் தீனி போட்டுள்ளோம். நாங்க ரொம்ப பிஸி, மன அழுத்தத்தில் இருந்து விடுதலை தரும் காமெடி படமாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சூர்யாவுக்கு சாதனையைத் தரப் போகும் 'சூரரைப் போற்று' டிரைலர்சூர்யாவுக்கு சாதனையைத் தரப் போகும் ... வருங்கால கணவருடன் சேர்ந்து வாழ்த்து சொன்ன காஜல்! வருங்கால கணவருடன் சேர்ந்து வாழ்த்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in