Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டிரெண்டிங், பரபரப்பில்லாமல் நகரும் 'பிக்பாஸ்'

26 அக், 2020 - 14:12 IST
எழுத்தின் அளவு:
டிரெண்டிங்,-பரபரப்பில்லாமல்-நகரும்-'பிக்பாஸ்'

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ்' சீசன் 4 நிகழ்ச்சி மூன்று வாரங்களைக் கடந்துவிட்டது. முதல் வாரம் பெரிய சர்ச்சை எதுவுமில்லை, இரண்டாவது வாரத்தில் ஒரு சில சிறிய சண்டைகள் ஏற்பட்டன. வைல்டு கார்டு மூலம் அர்ச்சனா நுழைந்தார். இரண்டாம் வார முடிவில் முதல் எவிக்ஷனாக நடிகை ரேகா வெளியேற்றப்பட்டார்.

மூன்றாவது வாரமான கடந்த வாரத்தில் 'டாஸ்க்'குகள் மூலம் சில சிறிய சண்டைகளும், சுரேஷ் சக்கரவர்த்தியின் வரம்பு மீறிய செயலும் நடைபெற்றது. ஆனாலும், சுரேஷ் செயலை அப்படியே பூசி மொழுகிவிட்டார்கள். தங்கள் வசதிக்கேற்ப ஒருவரைக் காப்பாற்றுவது, ஒருவரைத் திட்டுவது என கடந்த நான்கு சீசனாகவே பிக்பாஸ், கமல்ஹாசன் செய்து வருகிறார்கள்.

துடைப்பம் எடுத்து மூன்று பெண்களை அடித்த சுரேஷை பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றவில்லை. ஆனால், கடந்த சீசனில் எப்போதோ நடைபெற்ற ஒரு பெண் அவமதிப்பு விஷயத்தைப் பேசிய சரவணனை உடனடியாக வீட்டைவிட்டு வெளியேற்றினார்கள்.

நேற்று யார் வெளியேறப் போகிறார்கள் என்று எந்தவிதமான பரபரப்பும், டிரெண்டிங்கும் சமூக வலைத்தளங்களில் இல்லை. பொதுவாக கடந்த சீசன் வரை இது பற்றிய விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த சீசனில் அது பற்றியெல்லாம் ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை.

பொதுவாக யார் வெளியேறப் போகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் ஒரு விவாதம் போகும். அதை இந்த சீசனில் பார்க்கவே முடியவில்லை. நேற்று டுவிட்டர், பேஸ்புக் போனாலும் யாரும் அது பற்றி பதிவிடவில்லை. மாறாக, ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதையே கொண்டாடி பதிவிட்டு வந்தார்கள்.

நேற்றைய போட்டியில் ஆஜித் குறைவான வாக்குகளில் எவிக்ஷன் ஆனாலும், அவரிடம் இருந்த 'எவிக்ஷன் பாஸ்'ஐ பயன்படுத்தியதன் மூலம் மீண்டும் வீட்டுக்குள்ளேயே தன்னை தக்க வைத்துக் கொண்டார்.

மேலும், வாக்களிக்கும் முறைக்கேற்ப வீட்டில் உள்ளவர்கள் வெளியேற்றப்படுவதில்லை என்பதும் நேயர்களுக்கு நன்றாகவே தெரிந்துவிட்டது. சர்ச்சையைக் கிளப்புபவர்கள், கோபமாகப் பேசுபவர்கள், கிளாமராக ஆடை அணிபவர்கள் ஆகியோரை எலிமினேஷன் செய்யாமல் பிக்பாஸ் குழுவினரே தக்க வைத்துக் கொள்கிறார்கள் என்று மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த சீசனில் அவர்களாக ஏதாவது 'ஸ்கிரிப்ட்' எழுதி நாடகமாடினால் தான் டிரெண்டிங்கும் பரபரப்பும் வரும் போலிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சூரரைப்போற்று டிரைலர் - எகிறும் எமோஷனல்சூரரைப்போற்று டிரைலர் - எகிறும் ... தியேட்டர்களிலும் தீபாவளி கொண்டாட்டம் வருமா ? தியேட்டர்களிலும் தீபாவளி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

vijai tyagarajan - nagapattinam,இந்தியா
27 அக், 2020 - 12:26 Report Abuse
vijai tyagarajan நூறு நாள்ல விவசாயம் செய்ய சொல்லுங்க,இதெல்லாம் oru ப்ரோக்ராமா ........
Rate this:
man -  ( Posted via: Dinamalar Android App )
26 அக், 2020 - 17:13 Report Abuse
man waste of time EB bill, money also
Rate this:
Ramachandran - Chennai ,இந்தியா
26 அக், 2020 - 16:27 Report Abuse
Ramachandran Useless program. Avoid.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in