எனக்கு மரணமும் நிகழலாம் - பாலா உருக்கம் | அடம்பிடித்த சிறுமி : வீடியோ காலில் வந்து இன்ப அதிர்ச்சி தந்த விஜய் | நீச்சல் குளத்தில் போட்டோசூட் நடத்திய ஷிவானி | தங்கலான் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்த விக்ரம் | மாறிமாறி வாழ்த்து தெரிவித்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ் - சூரி | லியோ அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும்? | போனில் மட்டும் பேசு : பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு டார்ச்சர் கொடுத்த இயக்குநர் | எதிர்நீச்சல் தொடரில் 10 ஆண்டுகள் கூட நடிப்பேன் : மதுமிதா மகிழ்ச்சி | தீபிகா படுகோனின் ஜிம் மேட்டாக மாறிய ஐஸ்வர்யா மேனன் | 17 வருடங்களுக்கு பிறகு 2ம் பாகத்திற்காக இணைந்த சுரேஷ் கோபி - ஜெயராஜ் |
ஹாலிவுட்டின் பிரபல நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்நேகர்(73). 'டெர்மினேட்டர், ஜட்ஜ்மெண்ட் டே' போன்ற படங்களின் மூலம் உலகளவில் ரசிகர்களை ஈர்த்தவர். அரசியல்வாதியாகவும் இருந்துள்ளார். முக்கியமான பாடி பில்டிங்கில் அசத்தியவர். இன்றைக்கு பல பாடி பில்டர்களுக்கு முன்னாடியாக திகழ்பவர். அர்னால்டுக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை இப்போது நடைபெற்றுள்ளது. இதயத்தில் இருக்கும் பெருநாடி வால்வை மாற்ற அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
மருத்துவமனைக்கு பின்பு தனது உடல்நிலை குறித்து சமூகவலைதளத்தில் கைகளை உயர்த்தி பதிவிட்டிருப்பதாவது : ''கிளீவ்லேண்ட் மருத்துவ குழுவுக்கு நன்றி. எனது கடைசி அறுவை சிகிச்சையிலிருந்து எனது புதிய நுரையீரல் வால்வுடன் ஒரு புதிய பெருநாடி வால்வு பொருத்தப்பட்டு உள்ளது. நான் இப்போது அருமையாக உணர்கிறேன். எனக்கு சேவை செய்த செவிலியர்களுக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார்.