இதுதான் மெகா கூட்டணி : 32 ஆண்டுளுக்கு பின் இணைந்து நடிக்கும் ரஜினி, அமிதாப்? | விஜய் தேவரகொண்டா மீது குற்றச்சாட்டிய பிரபல நடிகை | கடினமான சோதனை : கஜோல் எடுத்த முடிவு | மீண்டும் இணைந்த டைரி பட கூட்டணி | மாவீரன் படத்தை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் நிறுவனம் | ‛வேட்டையாடு விளையாடு' ரீ ரிலீஸ் அப்டேட் | தமன்னாவுக்கு ரஜினி கொடுத்த பரிசு | ஜனாதிபதியை சந்தித்த சமந்தா | ராமர் வேடத்தில் நடித்த பிரபாஸுக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ் | வட சென்னை 2 : சந்தோஷ் நாராயணன் கொடுத்த அப்டேட் |
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் ராம்பாலா. சந்தானத்தின் நெருங்கிய நண்பரும் கூட.... இவர்கள் வெள்ளித்திரையிலும் இணைந்து தில்லுக்கு துட்டு என்ற படத்தை கொடுத்தனர். இப்படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து 'தில்லுக்கு துட்டு 2' படமும் உருவாகி அதுவும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அடுத்து சிவா வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் ராம்பாலா. இப்படத்திற்கு 'இடியட்' என பெயரிட்டுள்ளனர். ராம்பாலாவின் முந்தைய படங்களை போன்று இதுவும் பேயை வைத்து நடக்கும் காமெடி கதை தான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போதே புரிகிறது. நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது.