பழம்பெரும் ஹிந்தி நடிகை சுலோச்சனா லட்கர் மறைவு : பிரதமர் இரங்கல் | தமிழ் சினிமாவில் மீண்டும் த்ரிஷா அலை | ஜுன் 9ம் தேதி போட்டியில் 'போர் தொழில், டக்கர்' | பானி பூரி: தமிழில் தயாராகும் புதிய வெப் தொடர் | சினிமா ஆகிறது முதல் போஸ்ட்மேன் கதை | பிம்பிளிக்கி பிலாப்பி: பிரான்ஸ் நாட்டின் லாட்டரி பின்னணியில் உருவாகும் படம் | 24 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கும் பாரதி கணேஷ் | 2018 படத்தில் முதலில் நடிக்க மறுத்தேன் : டொவினோ தாமஸ் | எனக்கு கேன்சர் என்று சொல்லவில்லை : சிரஞ்சீவி விளக்கம் | கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சுரேஷ்கோபியின் மகள் |
'திரெளபதி' படத்தின் இயக்குனர் மோகன்.ஜி அடுத்தப்பட அறிவிப்பை சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை தினமான இன்று(அக்., 25) அறிவித்துள்ளார். தனது அடுத்தப்படத்திற்கு "ருத்ர தாண்டவம்" என பெயரிட்டு, இயக்கி, தயாரிக்கிறார். திரௌபதி படத்தில் நாயகனாக நடித்த ரிஷி ரிச்சர்டு மீண்டும் இப்படத்தில் நாயகனாக இணைந்துள்ளார்.
கதாநாயகி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களின் தேர்வு நடைபெறுகிறது. பரூக் ஒளிப்பதி செய்ய, ஜூபின் இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் துப்பாக்கி, தோட்டா, கைவிலங்கு, மீடியா மைக், ஊசி மற்றும் கிறிஸ்துவ ஜப மாலை போன்றவை இடம் பெற்றுள்ளன. மேலும் படத்தின் போஸ்டரில் 'அதர்மத்தை அழித்து தர்மத்தை காப்போம்' என கேப்ஷனாக கொடுத்துள்ளனர். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.