விஜய் 68 : முதல் பாடலுக்கு நடனம் அமைக்கும் பிரபுதேவா | அஜர்பைஜான் கிளம்பிய அஜித் - த்ரிஷா : ஒரு வழியாக துவங்குகிறது ‛விடாமுயற்சி' | 32 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி - அமிதாப் கூட்டணி : வந்தாச்சு அறிவிப்பு | ரஜினி படத்தில் இணைந்தார் பஹத் பாசில் | ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா |
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து, தற்போது ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரையும் இணைத்து, ஆர்ஆர்ஆர் என்கிற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ராஜமவுலி. இந்தப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வருகிறது. இந்தப்படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் கொமரம் பீம் கதாபாத்திரத்தின் அறிமுக டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இது ஒருபக்கம் இருக்க, 1990ல் கொமரம் பீம் என்கிற பெயரில் ஒரு படத்தை இயக்கிய சீனியர் இயக்குனர் அல்லானி ஸ்ரீதர் என்பவர் தற்போது கொமரம் பீம் கதையை பாலிவுட்டில் இயக்க இருக்கிறாராம். அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றனவாம். ராஜமவுலியின் படம் இந்தியில் வெளியாகும் அதே சமயத்தில் தான், இவர் இயக்கும் படத்தையும் வெளியிட திட்டமிட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆர்ஆர்ஆர் படத்திற்கு எதிர்பாராத புதிய கோணத்தில் ஒரு சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.