Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஆபாச தளங்களாக மாறிய ஓடிடி தளங்கள்: கங்கனா கோபம்

24 அக், 2020 - 17:40 IST
எழுத்தின் அளவு:
Kangana-angry-about-OTT

பிரபல ஓடிடி நிறுவனமான ஈராஸ் நவ், நவராத்திரி பண்டிகையை ஒட்டி வெளியிட்ட இரண்டு விளம்பர போஸ்டர்கள் படு ஆபாசமாக இருப்பதாகவும், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் சர்ச்சையில் சிக்கியது. இது தொடர்பாக சமூகவலைதளங்களில் கண்டன ஹேஷ்டேக்குகளும் டிரெண்டிங்கானது.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், ஓடிடி தளங்கள் ஆபாசத் தளங்களாக மாறி வருவதாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நாம் சினிமாவை திரையரங்கில் குழுவாகப் பார்க்கும் முறையைப் பாதுகாக்க வேண்டும். தனிப்பட்ட சிலரின் பார்வைக்காக பாலியல் உள்ளடக்கத்தைச் சேர்ப்பதை விட பார்வையாளர்களை அதிக அளவில் கவர்ந்திழுப்பது மிகவும் கடினம். கலையை டிஜிட்டல் மயமாக்குவதில் இந்த மாதிரியான சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகிறது. எல்லா ஓ.டி.டி தளங்களும் ஆபாசத் தளங்களாவே இருக்கின்றன.

திரைப்படங்கள், ஒட்டுமொத்த குடும்பம், குழந்தைகள், அக்கம் பக்கத்தினருடன் பார்க்கும் ஒரு சமூக அனுபவமாக இருக்க வேண்டும். சமூகமாகச் சேர்ந்து பார்ப்பது நமது விழிப்புணர்வை அதிகரிக்கும். நாம் பார்க்கும் ஒரு விஷயத்தை இன்னொருவரும் பார்க்கிறார் எனும்போது, அவர்கள் நம்மைப் பற்றி எப்படி நினைக்கிறார்களோ அப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவோம். கவனமாக இருப்போம். நமது மூளைக்கும், உணர்ச்சிகளுக்கும் தரும் விஷயங்களில் தணிக்கை மிக முக்கியம். தணிக்கை என்பது நமது மனசாட்சியாகக் கூட இருக்கலாம்” என தனது காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார் கங்கனா.

தங்களது விளம்பர போஸ்டருக்கு எதிர்ப்பு உண்டானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அந்த இரண்டு போஸ்டர்களையும் நீக்கிய ஈராஸ் நவ், கூடவே மன்னிப்பும் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "நாங்கள் எல்லா கலாச்சாரங்களையும் சமமாக மதிக்கிறோம். யாருடைய உணர்வையும் புண்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல. நாங்கள் அந்த போஸ்டர்களை நீக்கிவிட்டோம். மேலும், அது யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்திருந்தால், வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சிறை செல்ல தயார் : கங்கனாசிறை செல்ல தயார் : கங்கனா மகேஷ் பட் துன்புறுத்துகிறார் : பாலிவுட் நடிகை புகார் மகேஷ் பட் துன்புறுத்துகிறார் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Rajan - Chennai,ஐக்கிய அரபு நாடுகள்
25 அக், 2020 - 09:09 Report Abuse
Rajan I agree sister, why govt is not active in this?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in