பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு, 'சீறும் புலி' என்ற பெயரில் படமாகிறது. இந்தப் படத்தில் பிரபாகரன் வேடத்தில் பாபிசிம்ஹா நடிக்கிறார். வெங்கடேஷ் குமார் ஜி டைரக்டு செய்கிறார். கடந்த 2018ம் ஆண்டு பிரபாகரனின் பிறந்த நாளன்று இந்தப் படம் குறித்த அறிவுப்பு வெளியானது.
பிரபாகரனைப் போன்ற கெட்டப்பில் பாபி சிம்ஹா அமர்ந்திருப்பது போன்ற பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க இருப்பதாக அப்போது வெங்கடேஷ் குமார் தெரிவித்திருந்தார். முதல் பாகத்தில் கல்லூரி மாணவராக இருந்த பிரபாகரன் எப்படி விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் ஆனார் என்பது பற்றியும், இரண்டாவது பாகத்தில் பிரபாகரனின் தமிழீழப் போர் பற்றியும் படமாக எடுக்க அவர் திட்டமிட்டிருந்தார்.
2019ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட, சிலப்பல காரணங்களால் தாமதமானது. இந்நிலையில் விரைவில் சீறும் புலி ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.