Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை

24 அக், 2020 - 13:46 IST
எழுத்தின் அளவு:
Vijay-met-their-fans-club-members

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சில தினங்களுக்கு முன், ''மக்கள் விரும்பினால் மக்கள் இயக்கம் தேவைப்பட்டால் அரசியலுக்கு வரும் என தெரிவித்தார். மக்களாக அழைத்தால் மட்டுமே நாங்கள் பவர்புல்லாக வர முடியும்'' என்றார்.

இதனால் தமிழகத்தில் மீண்டும் பல இடங்களில் விஜய்யை முதல்வர் போன்று சித்தரித்து, அவரை அரசியலுக்கு வரச் சொல்லி போஸ்டர் ஒட்ட தொடங்கினர். இந்நிலையில் நடிகர் விஜய் சென்னையில் உள்ள தனது பனையூர் இல்லத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, கடலூர் உள்ளிட்ட பல மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மக்கள் பணிகளை தொடர்ந்து செய்யுங்கள். எனது உதவி தொடரும் என நிர்வாகிகளிடம் விஜய் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் அரசியல் பணி குறித்து விவாதித்தாக சொல்லப்படுகிறது. அதேசமயம் இது வழக்கமாக நிர்வாகிகள் உடனான சந்திப்பு தான், அரசியல் உள்நோக்கம் கிடையாது என மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் விஜய்யின் இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
படுகா மொழியில் நடிக்க விரும்பும் வாணிபோஜன்படுகா மொழியில் நடிக்க விரும்பும் ... கிரிக்கெட் போட்டியின் இடையே 'மூக்குத்தி அம்மன்' டிரெய்லர் ரிலீஸ்! கிரிக்கெட் போட்டியின் இடையே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Shiva -  ( Posted via: Dinamalar Android App )
26 அக், 2020 - 11:44 Report Abuse
Shiva விஜய் எப்பொழுதும் தனது ரசிகர்களை சந்திப்பவர். அதனால் இதை திரித்து பேச வேண்டிய அவசியமில்லை. ரசிகர்களை மதிக்கும் ஒரே நடிகர் விஜய்...
Rate this:
siriyaar - avinashi,இந்தியா
25 அக், 2020 - 14:24 Report Abuse
siriyaar ஒருத்தருக்கு பொண்ணு கொடுப்பதற்கு ஜாதகம் பார்ப்பது போல் இன்னும் இரண்டு பொருத்தம் பார்க்கவும் ஒன்று அவன் திமுகாவான்னு, மற்றொன்று எதாவது ரசிகர் மன்றத்தில் உருபுபினாரான்னு. ராகு கேது பிரச்சினை கூட பரவாயில்லை.
Rate this:
S. Narayanan - Chennai,இந்தியா
25 அக், 2020 - 14:00 Report Abuse
S. Narayanan இவர்கள் மக்களை குழப்புவர்க்குதான் லாயக்கு. படிக்காதவர்கள் அரசியலுக்கு வந்தால் படித்தவர்களை கூட வைத்துக்கொண்டுதான் எதையும் செய்யமுடியும். மக்கள் எவ்வளவு காலம் சினிமா மாயையில் இருப்பார்கள். சிந்திக்க தொடங்குங்கள் மக்களே.
Rate this:
Yezdi K Damo - Chennai,சிங்கப்பூர்
25 அக், 2020 - 13:24 Report Abuse
Yezdi K Damo இனிமே சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரணும்னா மிலிட்டரியில் இரண்டு வருடங்கள் வேலை செய்யும் அனுபவம் வேண்டும் என்ற சட்டம் வரவேண்டும் . நடிகைகளுக்கும் இந்த சட்டம் பொருந்த வேண்டும் .
Rate this:
oce -  ( Posted via: Dinamalar Android App )
25 அக், 2020 - 08:34 Report Abuse
oce ஒரு நாலைந்து படத்தில் நடித்தவுடன் பேர் வந்து விடும். அதை வைத்து அரசியல் செய்ய வேண்டியது.அதற்கென ஒரு சோம்பேறி ரசிகர். கூட்டம். மக்கள் நல பணிகளில் அரசியல் இல்லை என்பது ஏமாற்றல். ஆதாய நோக்கில் இந்த ஏமாற்றல் வேலையை சினிமா காரர்களுக்கு கற்று கொடுத்ததே ஒரு பகுத்தறிவு கூட்டம்.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in