ஸ்பெயின் பறந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் மீனா : 40 நாட்களுக்கு பின் வெளி உலகத்திற்கு வந்தார் | லோகேஷ் கனகராஜை பாராட்டிய ரஜினி, விஜய் | விஜய் யேசுதாஸை இயக்கும் 10ம் வகுப்பு மாணவி | மீண்டும் ஐதராபாத்தில் அஜித் குமார் | சந்திரமுகி 2வில் வடிவேலுவின் கேரக்டர் விபரம் வெளியானது | சண்டைக்காட்சியில் நடித்தபோது மீண்டும் விபத்தில் சிக்கிய விஷால் | நயன்தாராவின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா? | ரஜினி செய்த மாற்றம் |
காமெடி நடிகர் சூரி, தான் நடித்த வீரதீரசூரன் படத்தின் இயக்குனர் அன்புவேல் ராஜன், அந்த படத்தின் தயாரிப்பாளரும், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா மீது நில மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். தனக்கு நிலம் வாங்கித் தருவதாக கூறி 2 கோடியே 70 லட்சம் ரூபாய் ஏமாற்றி விட்டதாக அவர் தாக்கல் செய்துள்ள வழக்கு மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். அதோடு ரமேஷ் குடவாலா தமிழக போலீசில் உயர் பதவியில் இருந்ததால் இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரிக்க கூடாது, சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.
தற்போது இந்த வழக்கில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் ரமேஷ் குடவாலா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிற நிலையில் அவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நவராத்திரி பூஜை விடுமுறைக்கு பிறகு விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.