டாப்ஸி படத்தில் கதாநாயகியாக சமந்தா | விக்ரம் படம் பார்த்துவிட்டு கமலை வாழ்த்திய வானதி சீனிவாசன் | மலையாள இயக்குனர் தமிழில் இயக்கும் படத்தில் ஹீரோவாக சரத்குமார் | உருக்கமாக பதிவிட்டு அனுதாபம் தேடும் பாலியல் புகார் நடிகர் | ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன் வருகை : மற்றவர்கள் எப்போது ? | உதயநிதியின் அடுத்த படத் தலைப்பு 'கழகத் தலைவன்' ? | எதற்கும் அஞ்சமாட்டேன் ; உயிரை விடவும் தயார் : காளி போஸ்டர் சர்ச்சைக்கு லீனா மணிமேகலை பதில் | கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குநர் திடீர் மாற்றம் | பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் |
காமெடி நடிகர் கவுண்டமணியின் உடல்நிலை குறித்து அடிக்கடி வதந்தி பரவும். இதை சிலர் திட்டமிட்டு பரப்பி வருவதாக கவுண்டமணியும் கூறுவார். சில நாட்களில் அந்த வதந்தி அப்படியே முடிந்து போகும். இதேப்போன்று சில தினங்களாக கவுண்டமணியின் உடல்நிலை குறித்து சில யு-டியூப் சேனல்கள் தகவல் வெளியிட்டது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கவுண்டமணி தனது வழக்கறிஞர் மூலம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: சினிமா துறையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன். 82 வயதில் நல்ல ஆரோக்கியத்துடன் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறேன்.
சில யு டியூப் சேனல்கள் எனது உடல்நிலை கடுமையாக பின்னடைவு ஏற்பட்டு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. அதை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இது முற்றிலும் தவறான செய்தி. நல்ல ஆரோக்கியத்துடன் எனது குடும்பத்தினருடன் இருந்து வருகிறேன்.
இதுபோன்ற தவறான மற்றும் அவதூறான செய்திகளால் நானும் எனது குடும்ப உறுப்பினர்கள், ரசிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உண்மைக்கு புறம்பான பொய் செய்தியை பரப்பிய சேனல்களை தடை செய்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொய் செய்தியை சம்பந்தப்பட்ட சேனலில் இருந்து நீக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கவுண்டமணி தெரிவித்திருக்கிறார்.