ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் 1947 | கன்னடத்தில் திரிஷ்யம் 2 : பி வாசு இயக்குகிறார் | அகோரியாக அதிரவைக்கும் பாலகிருஷ்ணா | ரிலீஸ் தேதியுடன் ஜூனியர் என்டிஆரின் புதுப்பட அறிவிப்பு | ராதே ஷ்யாம் புதிய போஸ்டர் வெளியீடு | கர்ணன் - தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி | கொரோனாவிலிந்து மீண்டுவிட்டோம் - மாதவன் | சாந்தி வாழ்க்கை படம் துவங்கியது | தனுஷிற்கு ஜோடியாகும் உப்பெனா நாயகி | கபடி பயிற்சியில் துருவ் விக்ரம் |
தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் சிங்கம்- 2 படத்தில் வில்லனாகவும் மற்றும் துருவங்கள் பதினாறு படத்தில் கதையின் நாயகனாகவும் நடித்து இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் நடிகர் ரகுமான். சமீபத்தில் இவர் ஒரு அழகான பூனைக்குட்டியுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம், சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து ரகுமான் கூறும்போது, “தனது இளைய மகள் அலிஷா எப்போதும் ஒரு செல்லப்பிராணி வளர்க்க விரும்பினாள். ஆனால் அதற்கு வீட்டில் உள்ள சூழல் சரியாக அமையவில்லை. இந்தநிலையில் தனது தோழி வெளியூர் செல்வதாகவும் அதுவரை பார்த்துக்கொள்ள வேண்டும் எனக்கூறி அவளது வீட்டில் இருந்து ஒரு பூனைக்குட்டியை கொண்டு வந்தாள். வந்த இரண்டு நாட்களிலேயே சுசி என்கிற அந்த பூனைக்குட்டி வீட்டில் உள்ள அனைவரையும் கவர்ந்துவிட்டது. குறிப்பாக என் மனைவி அதற்கு ஒரு தாயாகவே மாறி விட்டார்..
பின்னர் தான் தெரிய வந்தது என் மகள், தனது தோழி வீட்டில் இருந்து இந்த பூனைக்குட்டியை வாங்கி வரவில்லை என்றும், செல்லப்பிராணிகள் விற்கும் ஒரு கடையில் இருந்து கடன் சொல்லி அதை வாங்கி வந்திருக்கிறாள் என்றும். அதன்பிறகு அதற்கான பணத்தை நானே கொடுத்துவிட்டேன். ஒரு செல்லப்பிராணி நம் வீட்டிற்குள் நுழையும்போது வீட்டின் சூழலே மாறி விடுகிறது என்பதை உணர்ந்தேன்” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் ரகுமான்.