மேக்னா நடிக்கும் நான் வேற மாதிரி | லிப்ட்-ல் பாடிய சிவகார்த்திகேயன் | ஹாஸ்டல் ஆக மாறிய மலையாள ரீமேக்கில் அசோக் செல்வன் | தொப்பை வளர்த்து, கரைத்த உன்னி முகுந்தன். | தனிமைப்படுத்திக் கொண்ட மகேஷ்பாபு - ராம்சரண் | கொரோனா தீவிரத்திலும் விடாமல் படம் இயக்கிவரும் மோகன்லால் | லாபம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் வாழ்க்கையில் முக்கியமான தருணம் : சூரி நெகிழ்ச்சி | மீண்டும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட இலியானா | தெலுங்கு கற்கும் விஜய் சேதுபதி |
தமிழில் விஷால் நடித்த சிவப்பதிகாரம் படம் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ். தொடர்ந்து மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்த இவர், தமிழில் தடையறத் தாக்க என்கிற ஹிட் படத்திலும் நடித்தார். அதேசமயம் சில படங்களில் பின்னணி பாடகியாகவும் பாடல்களை பாடியுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்தார்.
அதுமட்டுமல்ல தனக்கு ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில் தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார் மம்தா மோகன்தாஸ். தனது நண்பரான நோயல் பென் என்பவருடன் இணைந்து தயாரிப்பில் இறங்கியுள்ள மம்தா, இந்த நிறுவனத்திற்கு மம்தா மோகன்தாஸ் புரடக்சன் என்றே பெயர் வைத்துள்ளார். முதல் படத்தில் நடிப்பவர்கள், இயக்குனர் யார் என்பது குறித்த தகவல்களை விரைவில் வெளியிட இருக்கிறார் மம்தா மோகன்தாஸ்.