டாப்ஸி படத்தில் கதாநாயகியாக சமந்தா | விக்ரம் படம் பார்த்துவிட்டு கமலை வாழ்த்திய வானதி சீனிவாசன் | மலையாள இயக்குனர் தமிழில் இயக்கும் படத்தில் ஹீரோவாக சரத்குமார் | உருக்கமாக பதிவிட்டு அனுதாபம் தேடும் பாலியல் புகார் நடிகர் | ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன் வருகை : மற்றவர்கள் எப்போது ? | உதயநிதியின் அடுத்த படத் தலைப்பு 'கழகத் தலைவன்' ? | எதற்கும் அஞ்சமாட்டேன் ; உயிரை விடவும் தயார் : காளி போஸ்டர் சர்ச்சைக்கு லீனா மணிமேகலை பதில் | கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குநர் திடீர் மாற்றம் | பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் |
தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் கவுண்டமணி. 80, 90களில் அவரை காமெடியில் மிஞ்ச இங்கு யாருமே இல்லை. பின்னர் நடிப்பதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டார்.
அவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாரோ சிலர் வதந்தி கிளப்பிவிட்டுள்ளார்கள். விஷயம் தன்னுடைய காதுக்கு வந்ததும் அது குறித்து கவுண்டமணி கோபம் அடைந்துள்ளார். அடிக்கடி இப்படி ஏதாவது வதந்திகளைக் கிளப்புவதே சிலரது வேலையாக உள்ளது என வருத்தப்பட்டுள்ளார்.
அவர் வீட்டில் நலமாகவே இருக்கிறாராம். அடுத்து படம் ஒன்றில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தையில் இருக்கிறார் என்றும் தகவல். தன்னைப் பற்றி சிலர் இப்படி வதந்திகளைக் கிளப்புவதை ஒரு வேலையாகவே வைத்திருக்கிறார்கள் என அவர் பாணியில் நக்கலடித்துள்ளார்.
வாட்சப் வந்தாலும் வந்தது அதில் வதந்திகளைக் கிளப்பி பரபரப்பு ஏற்படுத்த சில மன நோயாளிகள் உள்ளார்கள். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மனதளவில் எந்த அளவிற்கு பாதிக்கப்படுவார்கள் என்பது குறித்து அப்படிப்பட்டவர்களுக்குக் கவலையே இல்லை.