இந்தியாவின் 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை நெட்பிளிக்ஸ் உடன் கொண்டாடுங்கள் | ஸ்பெயின் பறந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் மீனா : 40 நாட்களுக்கு பின் வெளி உலகத்திற்கு வந்தார் | லோகேஷ் கனகராஜை பாராட்டிய ரஜினி, விஜய் | விஜய் யேசுதாஸை இயக்கும் 10ம் வகுப்பு மாணவி | மீண்டும் ஐதராபாத்தில் அஜித் குமார் | சந்திரமுகி 2வில் வடிவேலுவின் கேரக்டர் விபரம் வெளியானது | சண்டைக்காட்சியில் நடித்தபோது மீண்டும் விபத்தில் சிக்கிய விஷால் | நயன்தாராவின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா? |
பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் கமல்ஹாசன், அர்ஜுன், நாசர், கௌதமி, கீதா மற்றும் பலர் நடித்து 1995ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி வெளியான படம் 'குருதிப்புனல்'. படம் வெளிவந்த போது பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் நல்லதொரு விமர்சனத்தைப் பெற்றது. தமிழில் இப்படி ஒரு மேக்கிங்கில் ஒரு படம் வருமா என்று வியக்க வைத்த படம்.
பிரபல ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் இயக்கியதால் படத்தின் அனைத்துத் தொழில்நுட்பங்களும் சிறந்த தரத்தில் இருந்தது என்ற பாராட்டைப் பெற்ற படம்.
ஒரு காட்சியில் கமல் எதிரிகளிடம் சிக்கி கடுமையாகத் தாக்கப்பட்டு அவர் முகம் முழுவதும் காயங்களாக இருக்கும். பார்ப்பதற்கு உண்மையாகவே அடிபட்டது போல இருக்கும் அளவிற்கு அந்த மேக்கப் இருக்கும். இப்படி இந்தப் படத்தில் சிறிய உதாரணங்கள் பலவற்றைச் சொல்லலாம்.
கமல்ஹாசன், அர்ஜுன் முதல் முறையாகக் கூட்டணி சேர்ந்து நடித்த படம். இருவரது ஆக்ஷன் காட்சிகளும் அவ்வளவு சிறப்பாக இருக்கும். அத்துடன் நாசரின் நடிப்பும் படத்திற்கு பக்க பலமாக அமைந்தது.
ஹிந்தியில் கோவிந்த் நிஹ்லானி இயக்கத்தில் ஓம்பூரி, நஸ்ருதீன் ஷா, ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்டவர்கள் நடித்து 1994ம் ஆண்டு வெளிவந்த 'துரோக்கால்' படத்தின் ரீமேக் தான் 'குருதிப்புனல்'.
இந்தியாவில் முதன்முதலில் வெளிவந்த டால்பி சர்ரவுன்ட் ஸ்டீரியோ திரைப்படம் இது. இதற்காகவே தமிழ்நாட்டில் சில தியேட்டர்கள் பல லட்சம் செலவு செய்து தங்களது ஒலித்தரத்தை மாற்றிக் கொண்டார்கள். ஒலியில் மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாக ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்த திரைப்படம் 'குருதிப்புனல்'.
25 ஆண்டுகளை கடந்து என்றும் மறக்க முடியாத ஒரு 'கனல்' இந்த 'குருதிப்புனல்'.