சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் | 'யாக்கை திரி'க்காக கொல்கத்தா வந்துசேர்ந்த பரத் | வாரணாசி ஸ்வீட் கடைக்காரருக்கு அஜீத் கொடுத்த இன்ப அதிர்ச்சி | எம்ஜிஆருக்கு சிறப்பு செய்த தலைவி படக்குழுவினர் |
கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ஞ் தயாரிக்கும் படம் பூமிகா. ஐஸ்வர்யா ராஜேஷ் சோலோ ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் பாவல் நவகீதன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ராபர்ட் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் 25-வது படமாக உருவாகியுள்ளது.
இதனை புதுமுகம் ஆர்.ரவீந்திரன் பிரசாத் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: இது சஸ்பென்ஸ் த்ரில்லர் வகை படம். அதே சமயம் மென்மையான உணர்வுகளையும் பேசும். இன்றைக்கு தேவையான ஒரு சோசியல் மெசேஜையும் படம் சொல்கிறது. சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்பதால் கதை பற்றி விரிவாக சொல்ல இயலவில்லை.
பெரும்பகுதி படப்பிடிப்பு நீலகிரி மாவட்ட மலைகளில் நடந்தது. படப்பிடிப்பு நடந்த காலத்தில் கடும் குளிர் இருந்தபோதும் அதை பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் நடித்தால் ஐஸ்வர்யா ராஜேஷ். அவரின் 25 படம் என்பதால் அதை மனதில் வைத்து இந்த படத்தை அவருக்கு முக்கியமான படமாக இருக்கும் விதமாக உருவாக்கி வருகிறோம். என்றார். காட்டை அழிக்கும் சமூக விரோதிகளை பழிவாங்கும் ஒரு வனதேவதையின் கதை என்பதுதான் படத்தின் ஒன் லைன் என்கிறார்கள்.