Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெயரை மாற்றிவிட்டாரா சிலம்பரசன்?

22 அக், 2020 - 17:40 IST
எழுத்தின் அளவு:
Did-simbu-change-his-name.?

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் சிம்பு. ஒரு காலத்தில் சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

2017ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் ஆரம்பமான போது தன் வீட்டின் முன் போராட்டத்தை ஆரம்பித்து அதை தனது டுவிட்டர் தளத்தில் பகிர்ந்து பரபரப்பூட்டினார். அதன் பிறகே பல தமிழ் நடிகர்கள், நடிகைகள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களம் இறங்கினர்.

அதன்பின் ஆகஸ்ட் மாதம் டுவிட்டரை விட்டு விலகுவதாக சிம்பு அறிவித்தார். அப்போது அவருடைய டுவிட்டர் ஐடி iam_str என இருந்தது. சிம்பு டுவிட்டரை விட்டு விலகினாலும் வேறு யாருக்கும் தெரியாமல் வேறு ஒரு பெயரில் டுவிட்டரில் செயல்பட்டு வந்ததாகச் சொல்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் நடப்பதை அடிக்கடி அவர் கவனித்தும் வந்தாராம்.

இந்நிலையில் இன்று(அக்., 22) மீண்டும் டுவிட்டர் தளத்தில் புதிய கணக்குடன் வந்துள்ளார் சிம்பு. தன்னை எப்போதும் எஸ்டிஆர் என்றே அழைக்க வேண்டும் என்று எப்போதோ சொன்ன சிம்பு இன்று ஆரம்பித்துள்ள டுவிட்டர் கணக்கு அவருடைய முழுப்பெயருடன் உள்ளது. SilambarasanTR_ என்பதுதான் அவருடைய புதிய டுவிட்டர் பெயர். எஸ்டிஆர் வேண்டாம், மீண்டும் தன்னை சிலம்பரசன் என்றே அழைக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டார் போலிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அப்பா நலமாகவே இருக்கிறார் - டாக்டர் ராஜசேகர் மகள்அப்பா நலமாகவே இருக்கிறார் - டாக்டர் ... குட்டி சிரஞ்சீவி சார்ஜா வந்தாச்சு குட்டி சிரஞ்சீவி சார்ஜா வந்தாச்சு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in