Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜோதிகாவால் சாத்தியமான கூட்டுக்குடும்பம்: சிவகுமார் பெருமிதம்

22 அக், 2020 - 14:39 IST
எழுத்தின் அளவு:
Sivakumar-about-joint-family

ஒழுக்கத்திற்கு பேர் போனவர் நடிகர் சிவகுமார். எந்த தீயப் பழக்கமும் இல்லாதவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். தீவிர யோகாசனப் பயிற்சியாளராக இருப்பதால் இப்போதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். இதைத்தாண்டி அவர் ஒரு சிறந்த ஆன்மிகவாதியும் கூட. மனைவி, மகன்கள் சூர்யா, கார்த்தி, மருமகள்கள் ஜோதிகா, ரோகினி, பேரக்குழந்தைகளுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார் சிவகுமார். இதை சாத்தியப்படுத்தியது மருமகள் ஜோதிகா என சிவகுமார் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

ஜோதிகா குறித்து சிவகுமார் கூறியதை நடிகர் பார்த்திபன் தனது சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், "59 நிமிடங்களில் இராமாயணம், (என்.எஸ்) கிருஷ்ணாயனம், ரஜனியாயணம், ஓமந்தூராராயணம் இப்படி பத்தாயிரத்து சொச்சப் பக்கங்கள் படித்துணர்ந்ததை கேட்டறிந்தேன். நம்ப முடிகிறதா? நம்ப சிவக்குமார் சார் சொல்லச் சொல்ல சிலாகித்து சிலிர்த்துத்தான் போனேன். தடுப்பணையில்லா குடுப்பினை அது. நடு நடுவே நானும் என் கிறுக்கின் செருக்கைக் காட்ட. 'ஜோ'திகாவால் ஜாயின்ட் பேமிலி சாத்தியமானது என்று அவர் சொன்னபோது நான் “அப்படியானால் அது ஜோயிண்ட் பேமிலி தானே ('jo'int family) தானே? என்றேன். சிரித்தார். பேச்சுப் பயிற்சி 1000, 10000, 100000 வரை கொடுக்கும். ஆனால் மூச்சுப் பயிற்சியோ 100 வரை நீடிக்கும்", என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தம்பி பீம் - ஆர்ஆர்ஆர் டீசருக்குக் குரல் கொடுத்த ராம் சரண்தம்பி பீம் - ஆர்ஆர்ஆர் டீசருக்குக் ... பிக்பாஸ் தெலுங்கு - நாகார்ஜுனாவுக்குப் பதிலாக சமந்தா ? பிக்பாஸ் தெலுங்கு - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in