மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
தெலுங்கு திரைப்பட நடிகர் டாக்டர் ராஜசேகர் சில தினங்களுக்கு முன்பு டுவிட்டரில் அவருடைய குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகப் பதிவிட்டிருந்தார். அவருடைய மகள்கள் ஷிவானி மற்றும் ஷிவாத்மிகா குணமடைந்துவிட்டதாகவும், அவரும் மனைவி ஜீவிதாவும் விரைவில் குணமடைந்துவிடுவோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ராஜசேகரின் இரண்டாவது மகள் ஷிவாத்மிகா டுவிட்டரில் தன்னுடைய தந்தை ராஜசேகர் கொரோனாவுடன் கடுமையாகப் போராடி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
“கொரோனாவுடன் அப்பாவுடைய போராட்டம் கடினமானது, அவர் கடுமையாகப் போராடி வருகிறார். உங்களது அன்பும், பிரார்த்தனையும், வாழ்த்துகளும் எங்களை பாதுகாக்கும் என நம்புகிறோம். அப்பா சீக்கிரம் குணமடைய நீங்கள் பிரார்த்திக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அன்பால் அவர் வலிமையுடன் மீண்டு வருவார்,” என்று பதிவிட்டுள்ளார்.
டாக்டர் ராஜசேகருக்கு கொரோனா தாக்கம் கடுமையாக உள்ளதென இதன் மூலம் தெரிகிறது. டாக்டர் ராஜசேகர் சீக்கிரம் குணமடைய பிரார்த்திப்போம்.