Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குடிக்கு அடிமை : பீட்டர் பாலை பிரிந்ததன் உண்மையை சொன்ன வனிதா

21 அக், 2020 - 13:00 IST
எழுத்தின் அளவு:
Vanitha-explained-why-she-away-from-Peter-paul

விஷூவல் எபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் என்பவரை கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி திருமணம் செய்துகொண்டார் நடிகை வனிதா விஜயகுமார். அவரது திருமண அறிவிப்பு வெளியான நாள் முதலே சர்ச்சைகளும் வெளியாக தொடங்கிவிட்டன. தனது கணவரை வனிதா அபகரித்துக்கொண்டதாக பீட்டர் பாலின் மனைவி போலீசில் புகார் தெரிவித்தார். மேலும், பீட்டர் பால் ஒரு குடிகாரர், அவருக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருக்கிறது என்பது உள்ளிட்ட புகார்களையும் அவர் முன் வைத்தார். ஆனால் இது எது எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்டார் வனிதா.

இந்நிலையில் திருமணம் நடந்து நான்கு மாதங்கள் கூட முழுமையாக முடியாத நிலையில் வனிதாவுக்கும், பீட்டர் பாலுக்கும் இடையேயான உறவு முடிந்துள்ளது. அறிக்கை மூலம் இதனை உறுதி செய்த வனிதா, தற்போது உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சுமார் 50 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கியுள்ளார்.

குறிப்பாக பீட்டர் பால் மீண்டும் குடிக்கு அடிமையாகி, எந்நேரமும் குடித்து கொண்டே இருப்பதாகவும், வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் வனிதா கூறியுள்ளார். பீட்டர் பாலை பற்றி அவரது மனைவி சொன்னது அனைத்துமே உண்மை தான் என கூறியுள்ள வனிதா, தனக்கும் அவருக்கும் சண்டை நடந்தது உண்மை தான் என்றும் தெரிவித்துள்ளார். பீட்டர் பாலை தான் காதலித்தது உண்மை என கூறியுள்ள வனிதா, வாழ்க்கையில் தான் ஏமாற்றமடைந்துவிட்டதாகவும், தோற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். தனது மனம் உடைந்துபிவட்டதாகவும் வனிதா அதில் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப தனக்கு சில காலம் ஆகும் என்பதால், தற்காலிகமாக சமூகவலைதளங்களில் இருந்து விலகுவதாகவும் வனிதா தெரிவித்துள்ளார்.

மேலும் திருமணத்தின் மீது எப்போதும் நம்பிக்கை இருந்தது. ஆனால் எனக்கு அமையவில்லை. என் வாழ்க்கை தொடரும். ஒரு பெண்ணாக காயப்பட்டுவிட்டேன். என் குழந்தைகளால் வலுவாக மீண்டும் வருவேன். அவர் மருத்துவமனையில் இருக்கும் போது எலிசபெத்துக்குப் பலமுறை போன் செய்தேன். அவருடைய வாழ்க்கையை நான் கெடுக்கவில்லை. மீண்டும் அவரோடு தாராளமாக வாழுங்கள். நடுவில் வந்தேன், நடுவிலேயே விலகிப் போய்விடுகிறேன் என கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (30) கருத்தைப் பதிவு செய்ய
தள்ளிப்போன தியேட்டர்கள் திறப்பு - அதிகமான அதிருப்திதள்ளிப்போன தியேட்டர்கள் திறப்பு - ... நடிகர் ஆர்.கே.சுரேஷ் திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா? நடிகர் ஆர்.கே.சுரேஷ் திருமணம்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (30)

22 அக், 2020 - 22:06 Report Abuse
Prasanna Krishnan p done in a unique way. dont spoil our Indian culture. Vanita get the the hell out of my state.
Rate this:
poongothai - Coimbatore,இந்தியா
22 அக், 2020 - 16:28 Report Abuse
poongothai எவ்வளவு ஸ்ட்ராங் கா அவருக்காக சப்போர்ட் செய்தீங்க, அந்த நேரத்தில் விசாரித்து இருக்கலாமே? மேடம் என்ன சொன்னாலும் நாம கேட்டுட்டு போக வேண்டியதுதான்., முட்டாளத்தனம்
Rate this:
baala - coimbatore,இந்தியா
22 அக், 2020 - 15:02 Report Abuse
baala அந்த டி-டோட்டலர் னு சொன்னீங்களே அது பொய் என்று உங்கள் வாயாலேயே சொல்லி விட்டீர்கள் மேடம்
Rate this:
s t rajan - chennai,இந்தியா
22 அக், 2020 - 14:06 Report Abuse
s t rajan இன்னும் எத்தனை கணவன் மனைவியை பிரிக்கப் போகிறாரோ இந்த வனிதை
Rate this:
ayyo paavam naan - chennai,இந்தியா
22 அக், 2020 - 11:13 Report Abuse
ayyo paavam naan ரஜனிகாந்த் ஒரு படத்தில் சொன்ன வசனம் நியாபகம் வருகிறது. அதிக ஆத்திரப்பட்ட பெண்
Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Aranmanai 3
  • அரண்மனை 3
  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in