Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா இல்லாமலேயே துவங்கிய நிழல் படம்

20 அக், 2020 - 19:29 IST
எழுத்தின் அளவு:
Nizhal-movie-shooting-starts-without-Nayanthara

நயன்தாரா தற்போது தமிழில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருவதால் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் அவ்வப்போது வருடத்திற்கு ஒன்று என்கிற கணக்கில் தான் படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் கடந்த வருடம் 'லவ் ஆக்சன் ட்ராமா' என்கிற மலையாள படத்தில் நடித்த நயன்தாரா, தற்போது மீண்டும் நிழல் என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். குஞ்சாக்கோ போபன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. நயன்தாரா நடிக்கும் காட்சிகள் இன்னும் சில நாட்கள் கழித்தே படமாக்கப்பட இருப்பதால், அவர் இந்த பூஜையில் கலந்து கொள்ளவில்லை.. இந்தப்படம் சுமார் பத்து கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. இதற்கு முன்பு குஞ்சாக்கோ போபன், நயன்தாரா இருவருமே ட்வெண்ட்டி-20 திரைப்படத்தில் நடித்திருந்தாலும், இருவரும் ஒரு காட்சியில்கூட இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நான் எப்போதும் சிங்கிள் தான்: சம்யுக்தா ஹெக்டேநான் எப்போதும் சிங்கிள் தான்: ... 5 வருடம் கழித்து மலர் டீச்சரை சந்தித்த மேரி 5 வருடம் கழித்து மலர் டீச்சரை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in