Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பீட்டர் பாலுடன் பிரச்னை : உறுதி செய்த வனிதா விஜயகுமார்

20 அக், 2020 - 15:23 IST
எழுத்தின் அளவு:
Vanitha-confirmed-she-was-problem-with-Peter-paul

கடந்த ஜூன் மாதம் பீட்டர்பால் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டார் வனிதா விஜயகுமார். பீட்டர்பால் தனது முதல் மனைவியிடம் இருந்து முறைப்படி விவாகரத்து பெறாமல் வனிதாவைத் திருமணம் செய்து கொண்டதாக பிரச்சினை வெடித்தது. இந்த விவகாரத்தில் பீட்டர்பாலின் முதல் மனைவி ஹெலனுக்கு ஆதரவாக லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்தர், கஸ்தூரி போன்றோர் குரல் கொடுத்ததால், சமூகவலைதளங்களில் அவர்களோடு வனிதா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பிரச்சினைகள் ஒருபுறம் சென்று கொண்டிருந்த போதும், பீட்டர்பாலுடன் தான் சந்தோசமாக வாழ்வதைக் காட்டும் வகையில் அடிக்கடி அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். சமீபத்தில் கோவாவில் தனது குடும்பத்துடன் தனது 40வது பிறந்தநாளையும் வனிதா கொண்டாடினார்.

இந்நிலையில் கோவாவில் பீட்டருடன் திடீரென வனிதாவுக்கு பிரச்சினை எழுந்ததாகவும், இதனால் வனிதா அவரை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விட்டதாகவும் சமூகவலைதளத்தில் ஒரு தகவல் வைரலானது. வனிதாவும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கருத்துக்கள் பதிவிட முடியாதபடி மாற்றி விட்டதால் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். அப்போது தான், 'பீட்டர் பாலை வனிதா வீட்டை விட்டு வெளியேற்றியது உண்மைதான்' என பதிவொன்றை வெளியிட்டார் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.

எப்போதும் தன்னைப் பற்றி மற்றவர்கள் கூறும் கருத்துக்களுக்கு உடனடியாக பதிலடி கொடுப்பவர் வனிதா. வழக்கம் போலவே இந்த விவகாரத்திலும் தன் பக்க விளக்கம் ஒன்றை அவர் டுவிட்டர் பதிவுகள் மூலம் அளித்துள்ளார்.

அதில், “எங்களை எதனாலும் பிரிக்க முடியாது என்று நினைத்தேன். நாம் காதலிக்கும் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ அல்லது உடல்நலம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு குணமடைந்து வந்தாலோ வாழ்க்கை மாறும். அவரை பார்த்துக் கொள்வதே எனக்கு வேலையாக இருந்தது. அவரை இழந்துவிடுவோமோ என்கிற வலியை என்னால் தாங்க முடியவில்லை. இன்றும் கூட அதே வலியில் தான் இருக்கிறேன்.

இந்நிலையில் சிலர் என் வாழ்க்கையை வைத்து பணமும், புகழும் சம்பாதிக்கிறார்கள். அடுத்தவர்களின் வலியில் ஆனந்தம் அடைகிறார்கள். என் வாழ்க்கையில் நல்லது நடந்தாலும் சரி, கெட்டது நடந்தாலும் சரி அதை எப்பொழுதுமே வெளிப்படையாக தெரிவிக்கும் நேர்மையானவள் நான். நான் எதையும் மறைக்க மாட்டேன், மறைப்பதற்கு எதுவும் இல்லை. தற்போது நான் பெரிய சவாலை சந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை தான் சொல்ல முடியும்.

இதை எப்படி தீர்ப்பது என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். இது வாழ்வா, சாவா என்பது பற்றியது ஆகும். நான் மிகுந்த வேதனையில் இருக்கிறேன். என் இதயம் கனக்கிறது. அன்பு தான் நான் விரும்புவது அதை இழக்க பயமாக இருக்கிறது. என் வேலை, குழந்தைகள் பாதிக்கப்படாமல் இந்த சவாலை எதிர்கொள்கிறேன். என் வாழ்க்கையில் எப்பொழுதுமே போராட்டம் தான். இது ஒன்றும் எனக்கு புதிது அல்ல.

நான் எதையும் தவறாக செய்யவில்லை. அன்பு தேவைப்பட்ட ஒருவருக்கு நான் அன்பு செலுத்தினேன். தற்போது, என் கனவுகளும், நம்பிக்கைகளும் நொறுங்கிய நிலையில் நிற்கிறேன். இதுவும் கடந்து போகும் என்று நம்புகிறேன். இதற்கு மேல் நான் யாரிடமும் எதையும் விளக்க வேண்டிய அவசியமில்லை. என் கணவர் மீது குறை சொல்லி அதன்மூலம் ஆதாயம் தேட முயற்சிக்க மாட்டேன். என்னை சுற்றி இருப்பவர்களையும் மனதிற்கொண்டு சரியான முடிவை எடுத்திருக்கிறேன். இறுதியாக, நான் இதுவரை எதையும் இழக்கவில்லை.” என வனிதா தெரிவித்துள்ளார்.

வனிதாவின் இந்தப் பதிவுகள் மூலம் பீட்டருக்கும், அவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டிருப்பது உண்மைதான் என்பது தெரிய வந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (28) கருத்தைப் பதிவு செய்ய
பிருத்விராஜுக்கு கொரோனா பாதிப்புபிருத்விராஜுக்கு கொரோனா பாதிப்பு ரீதுவுக்கு லக்கி பிரைஸ் ரீதுவுக்கு லக்கி பிரைஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (28)

Narayanan - chennai,இந்தியா
21 அக், 2020 - 11:48 Report Abuse
Narayanan வனிதாவின் பீட்டருடன் கல்யாணம் நான்காவது கணவன் முறையாக அமைந்துவிட்டானே என்றும் அதற்க்கு வனிதாவின் எதிர்ப்பாளர்களுக்கு அவர்விடுத்த சவால்களும் நன்றாக இருந்தது. என்றாலும் பீட்டர் ஒரு புகை பிடிப்பாளி என்றும், குடிகாரன் என்றும் அவரின் முதல் மனைவி சொன்னபின்னரும் வாக்காளத்துவாங்கி, இன்று அனைத்து சேமிப்பையும் பீட்டரின் உடல் நலத்திற்கு சிலவு செய்து இழந்து வருத்தம்தான். என்ன செய்ய? எதோ கடன். அவனுக்கும் வாழ்வை தக்கவைத்துக்கொள்ள தெரியவில்லை. அவன் எக்கேடு கேட்டு போகட்டும். சுய நலத்தை ஒதுக்கி ,மக்களுக்காக வாழ்வை ஒதுக்கிவிடுங்கள். பெற்றோர்களின் சாபம் வலியது .உணர்ந்து செயல்படுங்கள் .
Rate this:
V. SRINIVASAN - Chennai -,இந்தியா
21 அக், 2020 - 11:14 Report Abuse
V. SRINIVASAN மூணாவது காலி அடுத்து நாலாவது எப்போது வனிதா நாலாவது புருஷன் முன்பு கல்யாணம் செய்தவர்களை எல்லாம் விவாகரத்து செய்து விட்டாரா என்று நிச்சியம் செய்து விட்டு கல்யாண velai பார்க்க ஆரம்பி நல்ல பார்சி அல்லது சிங்க் பார்த்து கல்யாணம் பண்ணிகொள் வனிதா
Rate this:
Ganesh G - Hyderabad,இந்தியா
21 அக், 2020 - 10:33 Report Abuse
Ganesh G வனிதாவுக்கு இப்பொழுது யாரும் ஆதரவாக பேச மாட்டார்கள். உங்கள் விஷயத்தில் தலையிட நாங்கள் யார்? என்று ஒதுங்கி விடுவார்கள். என்னவெல்லாம் பேசினார்? இப்போ அனுபவி
Rate this:
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
21 அக், 2020 - 09:19 Report Abuse
மூல பத்திரம் தினமலர் இதுபோன்ற செய்திகளை தவிர்க்க வேண்டும்.
Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
21 அக், 2020 - 09:05 Report Abuse
Lion Drsekar முதலில் கோணல் , ஐந்தில் வளையாதது, தனக்காவது தெரியணும் அல்லது சொன்னாலாவது புரிந்து கொளல்வேண்டும், , பாவம் அவர் கூறியது போல் அனுபவம்தான் வாழ்க்கை, வந்தே மாதரம்
Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in