Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிருத்விராஜுக்கு கொரோனா பாதிப்பு

20 அக், 2020 - 13:55 IST
எழுத்தின் அளவு:
Corona-positive-to-Prithviraj

மலையாள நடிகரும், இயக்குனருமான பிருத்விராஜ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் 'ஜனகனமண' என்ற படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தார். அந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்ட காரணத்தால்தான் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பிருத்விராஜ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, “அக்டோபர் 7ம் தேதி முதல் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் 'ஜனகனமண' படத்தில் நடிக்க ஆரம்பித்தேன். கோவிட் கட்டுப்பாடுகள் அனைத்தையும் பின்பற்றித்தான் படப்பிடிப்பை நடத்தினோம். கடைசி நாள் படப்பிடிப்பாக நீதிமன்றக் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதற்கு முன்பும், பின்பும் கோவிட் டெஸ்ட் எடுத்துக் கொண்டோம். துரதிர்ஷ்டவசமாக இந்த முறை எனக்கு பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தது. அதனால் நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். லேசான தொற்று மட்டுமே, மற்றபடி நலமாக உள்ளேன். என்னுடன் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், டெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். சீக்கிரமே குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்புவேன் என நினைக்கிறேன். உங்கள் அனைவரின் அக்கறைக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று மார்ச் மாதம் ஆரம்பமாகி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது பிருத்விராஜ் அப்போது 'ஆடுஜீவிதம்' படக்குழுவினருடன் ஜோர்டான் நாட்டில் சிக்கிக் கொண்டார். அங்கிருந்து இந்தியா திரும்பியபின் அவர் கோவிட் டெஸ்ட் எடுத்த போது எந்த பாதிப்பும் அவருக்கு ஏற்படவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. ஆனால், இங்கு படப்பிடிப்பு நடந்த போது அவர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுவிட்டார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தீபாவளிக்கு டிவியில் நேரடியாக 'பூமி'தீபாவளிக்கு டிவியில் நேரடியாக ... பீட்டர் பாலுடன் பிரச்னை : உறுதி செய்த வனிதா விஜயகுமார் பீட்டர் பாலுடன் பிரச்னை : உறுதி செய்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Naveen Chandra Kumar Jyothilingam - Toronto ,கனடா
20 அக், 2020 - 18:24 Report Abuse
Naveen Chandra Kumar Jyothilingam Get well soon prithvi. God bless you🙏
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in