நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். அவர் கடைசியாக இயக்கிய 'என்ஜிகே' படம் தோல்வியடைந்தது. அந்தப் படம் வெளிவந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது.
செல்வராகவன் அடுத்து எந்தப் படத்தை இயக்கப் போகிறார் என்பது பற்றி இன்னும் எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை. 'புதுப்பேட்டை 2' உள்ளிட்ட சில படங்களுக்கு அவர் கதை, திரைக்கதை எழுதி முடித்துள்ளதாகத் தெரிகிறது.
செல்வராகவனுக்கு 2011ம் ஆண்டு கீதாஞ்சலியுடன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஏற்கெனவே ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். அடுத்து மூன்றாவதாக கீதாஞ்சலி தாய்மை அடைந்திருக்கிறார்.
'பிரெக்னென்சி போட்டோ ஷுட்' என்பது சில பிரபலங்களிடம் பேஷன் ஆக உள்ளது. அந்த போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் கீதாஞ்சலி பகிர்ந்துள்ளதால் தான் அவருடைய தாய்மை பற்றி வெளியில் தெரிய வந்துள்ளது.