Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தயாரிப்பாளர் ஆனார் நமீதா

20 அக், 2020 - 13:25 IST
எழுத்தின் அளவு:
Namitha-turn-as-producer

குஜராத் பெண்ணான நமீதா தெலுங்கு படங்களின் வழியாக தமிழ் சினிமாவுக்கு வந்தார். எங்கள் அண்ணா படத்தில் விஜயகாந்த் ஜோடியாக அறிமுகமானவர் அதன் பிறகு மகா நடிகன், ஏய், இங்கிலீஸ்காரன், சாணக்யா, கோவை பிரதர்ஸ், பில்லா 2 உள்பட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்தார்.

சின்னத்திரை நடன நிகழ்ச்சியில் நடுவராக இருந்த அவர் பிக்பாஸ் வீட்டிலும் இருந்தார். வீரேந்திர சவுத்ரியை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியல்வாதியாகவும் ஆகிவிட்டார்.

அடுத்த கட்டமாக தயாரிப்பாளராகி இருக்கிறார். நமீதா புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி, தனது நண்பர்களுடன் இணைந்து படம் தயாரிக்கிறார். இன்னும் தலைப்பு வைக்காத இந்த படத்தை ஆர்.எல்.ரவி மற்றும் மாத்யூ சகாரியா ஆகியோர் இயக்குகிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
புனித் ராஜ்குமாருடன் மீண்டும் இணையும் பிரியா ஆனந்த்புனித் ராஜ்குமாருடன் மீண்டும் ... '800'  படத்தில் அடுத்து நடிக்கப் போவது யார்? '800' படத்தில் அடுத்து நடிக்கப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20 அக், 2020 - 16:13 Report Abuse
Ramesh R பி ஜெ பியில் சேர்ந்தார் இன்று தயாரிப்பாளர் ... என்ன நடக்குது
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
21 அக், 2020 - 08:59Report Abuse
 Muruga Velநீங்களும் BJP யில் சேர்ந்து தயாரிப்பாளர் ஆகுங்களேன்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in