Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புனித் ராஜ்குமாருடன் மீண்டும் இணையும் பிரியா ஆனந்த்

20 அக், 2020 - 13:22 IST
எழுத்தின் அளவு:
Priya-Anand-to-pair-with-Puneeth-rajkumar-again

கடந்த ஆண்டு எல்.கே.ஜி படத்தில் ஹீரோயினாக நடித்த பிரியா ஆனந்த், ஆதித்யா வர்மா படத்தில் சிறப்பு தோற்றதத்தில் நடித்திருந்தார். தற்போது சுமோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கன்னடத்தில் ஆர்டிஎக்ஸ் படத்தில் நடித்து வரும் பிரியா ஆனந்த் அடுத்தாக புனித் ராஜ்குமாருடன் ஜேம்ஸ் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்த படத்தை சேத்தன் குமார் இயக்குகிறார், சரண் ராஜ் இசை அமைக்கிறார், சுரேஷா குடுவல்லி இசை அமைக்கிறார். கிஷோர் புரொடக்ஷன் சார்பில் கிஷோர் பத்திகொண்டா தயாரிக்கிறார்.

இந்த படத்தில் முதலில் நிதி அகர்வால், பூஜா ஹெக்டே நடிக்க பேச்சு நடந்து வந்தது. அவர்களது கால்ஷீட் கிடைப்பதில் சிக்கல் நீடித்ததால் தற்போது பிரியா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். பிரியா ஆனந்த் 3 ஆண்டுகளுக்கு முன்பு புனித் ராஜ்குமாருடன் ராஜகுமாரா என்ற படத்தில் இணைந்து நடித்திருக்கிறார். அதன் பிறகு இப்போது மீண்டும் இணைந்திருக்கிறார்.

இது குறித்து பிரியா ஆனந்த கூறியிருப்பதாவது : ராஜகுமாராவைப் போலவே, இந்த படமும் பேமிலி செண்டிமென்ட் நிறைந்த கமர்ஷியல் படம். ராஜகுமாராவில் எங்கள் ஜோடியை மக்கள் நேசித்ததால், புனித்துடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த படத்தில் நான் வளர்க்கும் ஒரு செல்ல நாய்குட்டியும் என்னுடன் நடிக்கிறது. இது கூடுதல் மகிழ்ச்சி. என்றார்

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
3வது கணவரை அடித்து துரத்தினாரா வனிதா?3வது கணவரை அடித்து துரத்தினாரா வனிதா? தயாரிப்பாளர் ஆனார் நமீதா தயாரிப்பாளர் ஆனார் நமீதா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21 அக், 2020 - 04:04 Report Abuse
J.V. Iyer இன்னும் இருக்கிறாரா ப்ரியா ஆனந்த் வாழ்க.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in