Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

800 - விஜய் சேதுபதி விலக என்ன காரணம்?

20 அக், 2020 - 11:34 IST
எழுத்தின் அளவு:
Why-Vijaysethupathi-out-from-800-movie?

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படமாக 800 என்ற படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். ஆனால் அவருக்கு ஈழத்தமிழர்கள் பலரும், தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

இலங்கை இனப்போரில் சிங்கள அரசுக்கு ஆதரவாக மலையக தமிழரான முரளிதரன் இருந்தார், இப்போதும் சிங்கள அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு உண்டு. 800 படத்திற்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து தெரிவித்ததும் ஈழத்தமிழர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

800 படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து சமூக வலைத்தளங்களில் விஜய் சேதுபதிக்கு எதிராக அடிக்கடி டிரெண்டிங் வந்தது. இந்நிலையில் தனது பயோபிக் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க வேண்டாம் என முரளிதரனே கோரிக்கை விடுத்தார். அதைத்தொடர்ந்து படத்தில் நடிக்கவில்லை என விஜய் சேதுபதி தெரிவித்தார்.

வெளிநாடுகளில் தமிழ் படங்களுக்கான மார்க்கெட் உருவாக முக்கிய காரணமானவர்கள் இலங்கை தமிழர்கள். அவர்கள் விஜய் சேதுபதி நடிக்கும் படங்களை புறக்கணிக்கும் முடிவுக்கு வந்தனர்.

இதனால் "மாஸ்டர்" உள்ளிட்ட விஜய்சேதுபதி நடிக்கும் படங்களின் தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் அவரிடம் 800 படத்தில் நடிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதாக தெரிகிறது

.ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக மற்ற படங்களும் பாதிக்க வேண்டுமா என கேள்வி எழுப்பி உள்ளார்கள். அதன் காரணமாகவே 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகி விட்டார் என்கிறார்கள். இந்த விவகாரத்தில் விஜய் சேதுபதி ரொம்பவே அப்செட் என்பது நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசிய விதத்திலேயே புரிந்து கொள்ளலாம்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
துக்ளக் தர்பார் படத்தில் ராஷி!துக்ளக் தர்பார் படத்தில் ராஷி! 3வது கணவரை அடித்து துரத்தினாரா வனிதா? 3வது கணவரை அடித்து துரத்தினாரா வனிதா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

thonipuramVijay - Chennai,யூ.எஸ்.ஏ
22 அக், 2020 - 01:13 Report Abuse
thonipuramVijay Muralidharan biopic தமிழில் ஏன் எடுக்கவேண்டும்???? யாராவது தமிழில் முஷாரப் biopic எடுப்பார்களா ? அதுபோல் முரளி biopic எடுப்பதும் தவறு, ஏன் சிங்கள cinema என்று ஒன்று இல்லையா? அவர்கள் எடுக்கட்டும் சிங்களர்கள் மட்டும் அந்த கரும படத்தை பார்க்கட்டும்.
Rate this:
vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ
20 அக், 2020 - 12:01 Report Abuse
vadivelu தமிழகத்து போராளிகளுக்கு ஒரு குடும்பத்தின் மீது எவ்வளவு பயம். நான்கு வருடங்களாக வாய் திறக்காத மவுனிகள், திடீர் என்று குதிப்பது அசிங்கமாகவோ, அவமானமாகவோ தெறியாத பிண்டங்கள். முரளி sun risers hyderabad பயிரிச்சியாளர், அதன் உரிமை ஒரு குடும்பத்தின் நபரிடம்.
Rate this:
Ramasubramanian Sk - pondicherry,இந்தியா
20 அக், 2020 - 11:56 Report Abuse
Ramasubramanian Sk தமிழ் மக்கள் நிஜம் நிழல் இரண்டும் ஒன்று என குழம்பி உள்ளார்கள். ஒரு நடிகன் என்று தான் பார்க்க வேண்டும். எந்த வேடம் என்றால் என்ன
Rate this:
mukundan - chennai,இந்தியா
20 அக், 2020 - 11:53 Report Abuse
mukundan தமிழர்களை கொன்று குவிக்கும் போது அதை ஆதரிக்கும் விதமாக (அதை கண்டும் காணாமல் இருப்பதற்கு) காங்கிரஸ் மத்திய அமைச்சரவையில் உரிமை கோரிய தி.மு.க வை விட முத்தையா முரளிதரன் மோசம் செய்ய வில்லை. சுடலை முதலமைச்சருக்கு போட்டி போட தகுதி இருக்கிறதா? இது தான் தமிழகத்தின் பேச்சு உரிமையா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Aranmanai 3
  • அரண்மனை 3
  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in