Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'புத்தம் புதுக் காலை' - வெளுத்து வாங்கிய நட்டி

19 அக், 2020 - 19:12 IST
எழுத்தின் அளவு:
Natty-Natraj-about-Putham-Pudhu-Kaalai

கொரானோ ஊரடங்கு காரணமாக திரையுலகத்தில் உள்ள பலர் அவர்களது படங்களின் வேலையை ஆரம்பிக்காமல் இருந்தார்கள். இந்நிலையில் முன்னணி ஓடிடி நிறுவனமான அமேசான் சில பிரபல தமிழ் இயக்குனர்களை வைத்து 'ஒரிஜனல்ஸ்' என 'புத்தம் புதுக் காலை' என்ற படத்தை வெளியிட்டது.

சுதா கொங்கரா, கவுதம் மேனன், ராஜீவ் மேனன், சுஹாசினி மணிரத்னம், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் இயக்கிய ஐந்து குறும்படங்கள்தான் 'புத்தம் புதுக் காலை'. இப்படத்திற்கு ரசிகர்களிடம் கடுமையான விமர்சனம் இருந்தது. எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக இல்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்து.

இந்தப் படம் பற்றி திரையுலகத்தில் உள்ள ஒருவரின் எதிர்ப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்ராஜ் படத்தைப் டுவிட்டரில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

அவர் பதிவிட்டிருப்பதாவது : “புத்தம் புது காலை... ஆக கொடுமை.... வாழ்த்துக்கள்.... தாங்க முடியலடா சாமி... கர்பமுற்றால் ஸ்பானிஷ் பாட்டு பாடுவோம். எங்களுக்கு ஸ்பானிஷ் தெரியுமே. ஆக சிறந்தவர்கள் தோற்றால் வளர்பவர்களுக்கு இடம் கிடைக்காது. நீங்கள் தோல்வியுற்ற நெறிமுறைகளைப் பாருங்கள். தயவு செய்து ஒரு தலைமுறையைக் கொல்லாதீர்கள். இடம் கொடுங்கள், இடம் கிடைக்கும்” என்று கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார்.

அவருக்கு இந்த 'புத்தம் புதுக் காலை' படத்தை இயக்கிய ஒட்டு மொத்த இயக்குனர்களின் மீது கோபமா அல்லது ஒரு சிலரின் மீது கோபமா என்பது தெரியவில்லை. ஆனால், மொத்தமாக தாக்கியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
சம்பளத்தைக் குறைத்த தெலுங்கு நடிகர்கள், தமிழில் நடக்குமா ?சம்பளத்தைக் குறைத்த தெலுங்கு ... நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட பிரியா பவானி சங்கர்! நீச்சல் குளத்தில் எடுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Bala Sreenivasan - Singapore,சிங்கப்பூர்
26 அக், 2020 - 08:05 Report Abuse
Bala Sreenivasan நட்டி கருத்து நூறு சதவிகிதம் சரி ஒரு படைப்பாளியின் படங்கள் பேசவேண்டும் படைப்பாளி அல்ல இந்த சுகாசினி, ராஜீவ் மேனன் படங்களையும்விடஅவர்கள் பேசுவதுதான் அதிகம் தெரியாமல்தான்தான் கேட்கிறேன் இவர்கள் தனியே இயக்கிய படங்களில் பார்க்கிற மாதிரி ஏதாவது ஒரு படம் சொல்லுங்களேன்? இதில் ராஜீவ் மேனன் பேசியே கொல்கிற டைப் காமிராவை கையாண்டால் மட்டும் போதாது கூடவே கதையும் சொல்லவேண்டும் என்கிற அடிப்படை விஷயத்தை இன்னும் இவர் புரிந்து கொள்ளவில்லை
Rate this:
குறையொன்றுமில்லை - குன்றக்குடி,ஐக்கிய அரபு நாடுகள்
24 அக், 2020 - 09:20 Report Abuse
குறையொன்றுமில்லை குப்பைகளின் தொகுப்பு அந்த படம். சுகாசினி படம் அய்யயோ
Rate this:
baygonspray - Aryan,ஈரான்
21 அக், 2020 - 22:39 Report Abuse
baygonspray கொஞ்ச நாளா இவருக்கு மனநிலை சரியில்லை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in