மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
சிவா இயக்கத்தில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடித்து 2015ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் 'வேதாளம்'. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார்.
மெஹர் ரமேஷ் இப்படத்திற்காக ஒரிஜனல் தமிழ் படத்தின் கதை, திரைக்கதையைத் தெலுங்கிற்காக கொஞ்சம் மாற்றியுள்ளாராம். மொத்த திரைக்கதையையும் படித்துப் பார்த்த சிரஞ்சீவி முழு திருப்தி அடைந்துவிட்டாராம்.
இப்படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி, கீர்த்தி சுரேஷ் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகத் தகவல். மகேஷ் பாபு நடிக்கும் 'சரக்குவாரி பாட்டா' படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி உள்ளதால் இப்படத்தில் நடிப்பாரா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.
சிரஞ்சீவி தற்போது 'ஆச்சார்யா' படத்தில் நடித்து வருகிறார். அடுத்து 'வேதாளம்' ரீமேக் மற்றும் மலையாளத்தில் வெளிவந்த 'லூசிபர்' படத்தின் ரீமேக்கிலும் நடிக்க உள்ளார்.