Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பேய் மாமாவில் கொரோனா மாதிரி கொடிய வைரஸ்

19 அக், 2020 - 15:11 IST
எழுத்தின் அளவு:
Peimama-story

பாக்யா சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரித்துள்ள படம் பேய்மாமா. இந்த படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ளார். காதாநாயகியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, மனோபாலா, ரேகா உள்பட பலர் நடித்துள்ளனர்.

எம்.வி.பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ் ஆர்யன் இசை அமைத்துள்ளார். சார்லி சாப்ளின், இங்கலீஸ்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ஷக்தி சிதம்பரம் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது:

வடிவேலுவை இரட்டை வேடங்களில் நடிக்க வெச்சு இந்த படத்தை எடுக்கலாம் என்று முதலில் யோசித்திருந்தேன். சில பல காரணங்களால் அது நடக்கவில்லை. அப்போதுதான் இம்சை அரசன் படத்தில் வடிவேலுவுக்கு பதில் யோகிபாபு நடிக்கவிருப்பதாக செய்தி வந்தது. அந்த செய்தி மூலமாக நாம ஏன் யோகிபாபுவை இந்த படத்தில் நடிக்க வைக்க கூடாதுன்னு தோணுச்சு அவரிடம் பேசினேன், இது வடிவேலுவுக்கு பண்ணின கதைன்னு சொன்னதும் முதலில் தயங்கினார் பிறகு ஓகே சொல்லிவிட்டார். இந்த படத்தில் யோகிபாபு ஒரு பிக் பாக்கெட் திருடன். அவரோட வாழ்க்கையில் நடக்கின்ற சம்பவங்கள் தான் படம்.

இதில் கொரோனா மாதிரி ஒரு விஷயமும் இருக்கு. வெளிநாட்டு மருத்துவக் கம்பெனியுடன் சேர்ந்துக்கிட்டு இங்கே இருக்குற ஒருசிலர் ஒரு வைரஸை மக்களிடையே பரப்புகிறார்கள். அந்த வைரஸுக்கான மருந்தும் அவர்களிடம் இருக்கும். ஆனால் அதை உடனே வெளியிடாமல் நோய் அதிகமாக பரவ வேண்டும் என்று காத்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் தலைமுறை தலைமுறையாக சித்த மருத்துவ சேவையை செய்கின்ற குடும்பத்தை சேர்ந்த ஒருத்தர் அந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கிறார். இதை அறிந்த அந்த வெளிநாட்டு மருத்துவக்குழு அந்த சித்த மருத்துவக் குடும்பதையே கொலை செய்துவிடுகிறார்கள். அவர்களது ஆவி, யோகிபாபுவுடன் சேர்ந்து எதிரிகளை பழிவாங்கி எப்படி மக்களை வைரஸிலிருந்து காப்பாற்றினார்கள், என்பதை முழுக்க முழுக்க காமெடி கலந்து உருவாக்கி இருக்கிறோம். படம் தியேட்டரில் வெளிவருகிறது. என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிரபாஸின் ராதே ஷியாம் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியதுபிரபாஸின் ராதே ஷியாம் படப்பிடிப்பு ... 'வேதாளம்' ரீமேக் : சிரஞ்சீவிக்கு முழு திருப்தி 'வேதாளம்' ரீமேக் : சிரஞ்சீவிக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in