Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தீபாவளிக்கு 3 படங்களை வெளியிட திட்டம் ?

19 அக், 2020 - 10:45 IST
எழுத்தின் அளவு:
3-Movies-may-release-on-Diwali

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் மாதம் மத்தியில் இருந்து தியேட்டர்கள் மூடப்பட்டன. சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு கடந்த 15ம் தேதி முதல் சில மாநிலங்களைத் தவிர பல மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்ட்டன.

தமிழ்நாட்டில் இந்த வாரம் திறக்கப்படலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. விஜயதசமிக்குள் தியேட்டர்களைத் திறந்தால் நன்றாக இருக்கும் என தியேட்டர்காரர்கள் தரப்பில் எண்ணுகின்றனர். அதற்கு அனுமதி கிடைக்கும் என்றே தெரிகிறது.

இந்நிலையில் விஜயதசமிக்கு அடுத்து வர உள்ள முக்கிய பண்டிகையாக தீபாவளி உள்ளது. எப்போதுமே தீபாவளி வெளியீடு என்றால் சினிமாவில் தனி கொண்டாட்டம்தான்.

அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி 50 சதவித இருக்கைகளுக்கு மட்டும்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெறும் 50 சதவீத வசூல் கிடைத்தால் வியாபார ரீதியாக பெரிய படங்கள் பாதிக்கப்படும். அதனால் பெரிய படங்கள் வெளிவர வாய்ப்பில்லை.

தீபாவளிக்கு 'மாஸ்டர்' வெளிவந்தால் நன்றாக இருக்கும் என தியேட்டர்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், 200 கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள இப்படம் அன்று வெளிவர வாய்ப்பில்லை. 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கிடைக்கும் போது மட்டுமே படத்தை வெளியிட வாய்ப்புள்ளது.

எனவே, இந்த தீபாவளிக்கு 3 சிறிய படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகுமார், சத்யராஜ் நடித்துள்ள 'எம்ஜிஆர் மகன்', ஜீவா, அருள்நிதி நடித்துள்ள 'களத்தில் சந்திப்போம்', ஆபாசப் படமான 'இரண்டாம் குத்து' ஆகிய படங்கள் வெளியாகலாம் என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மகா சமுத்திரத்தில் இணைந்த அனு இமானுவல்மகா சமுத்திரத்தில் இணைந்த அனு ... மாஸ்க் அணியாத அதிதி பாலனுக்கு அபராதம் மாஸ்க் அணியாத அதிதி பாலனுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in