நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
80களில் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் மிதுன் சக்கரவர்த்தி. தனது அறிமுகப் படத்திலேயே தேசிய விருது பெற்றவர். இவரது நடனத்திற்கு என எப்போதுமே தனியே ரசிகர்கள் உண்டு. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
நடிகராக மட்டுமின்றி சமூக சேவகராக, தொழில் முனைவோராக என பன்முகத் திறமையாளராக விளங்கி வரும் மிதுன் சக்கரவர்த்தியின் மகன் மகா அக்சய். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இவர் மீது டெல்லி போலீசில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரப் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட பெண் மும்பை போலீசில் புகார் அளிக்க கடந்த மார்ச் மாதம் டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அந்த பெண் அக்சய் மற்றும் அவரது தாய் மீது மும்பை ஒஷிவாரா போலீசில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், 'கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை மகா அக்சயுடன் உறவில் இருந்தேன். ஒரு நாள் அவரை சந்திக்க அந்தேரி மேற்கு, ஆதார்ஷ் நகரில் உள்ள வீட்டுக்கு சென்றேன். அப்போது அவர் மயக்க மருந்து கொடுத்து என்னை பலாத்காரம் செய்தார். இதனால் கர்ப்பமான எனக்கு கருத்தடை மாத்திரை கொடுத்து கருவை கலைத்தார். இதையடுத்து திருமணம் செய்து கொள்ளுமாறு மகா அக்சயை வலியுறுத்தினேன். இதனால் எங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் அவரை தொடர்பு கொண்டு பேச நினைத்த போது அவரது தாய் யோகிதா பாலி என்னை போனில் மிரட்டினார்' என அப்பெண் கூறியுள்ளார்.
இந்தப் புகார் தொடர்பாக மும்பைப் போலீசார் மகாஅக்சய் மற்றும் அவரது தாய் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அக்ஷய் மீது புகார் கூறி இருப்பவரும் ஒரு நடிகையே என்பது குறிப்பிடத்தக்கது.