மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
கடந்த 7 மாதங்களுக்கு மேலாக நீண்டு கொண்டே செல்லும் கொரோனா தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. ஏழை, பணக்காரன், பிரபலம் என பாகுபாடு காட்டாமல் பலரையும் தனது தாக்குதலுக்கு ஆளாக்கி வரும் கொரோனாவுக்கு தற்போது லேட்டஸ்டாக இலக்காகி இருக்கிறார்கள் பிரபல தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர் மற்றும் அவரது குடும்பத்தினர்.
இதுகுறித்த தகவலை தானே முன்வந்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள டாக்டர் ராஜசேகர், “வெளியான செய்திகள் உண்மைதான்.. நான், என் மனைவி ஜீவிதா மற்றும் குழந்தைகள் ஷிவானி, ஷிவாத்மிகா ஆகியோருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியாகி உள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறோம். குழந்தைகள் இருவருக்கும் கொரோனா தாக்கத்திலிருந்து முழுவதுமாக வெளியே வந்துவிட்டார்கள். நானும் ஜீவிதாவும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருகிறோம்” என்று கூறியுள்ளார் டாக்டர் ராஜசேகர்